என்ன படம் அது?
ஏதோ சமுத்திரகனியின் புதியபடமாம், மனிதர் கள்ளில் ஏதும் வெளிநாட்டு சரக்கு கலந்து குடித்தாரா இல்லை பெத்தடின் போட்டுவிட்டு வந்து பேசினாரா என்பது புரியவே இல்லை
கிராம தெய்வங்களை ஊருக்கு வெளியே வைத்துவிட்டு தமிழன் வடக்கத்திய தெய்வங்களை வைத்திருக்கின்றானாம்
அன்னாருக்கு கவலை
மிஸ்டர் கனி , அரேபியாவில் இருந்தும் பாலஸ்தீனத்தில் இருந்தும் வாடிகனில் இருந்தும் தெய்வங்கள் வந்திருக்கின்றதே அது பற்றி ஒரு வார்த்தை ஏன் சொல்லவில்லை?
புத்தனே நேபாள நாட்டுக்காரன்.
சிறு தெய்வ வழிபாட்டுக்கும் பெரும் ஆலய வழிபாட்டுக்கும் வித்தியாசம் தெரியாதவரா நீர்?
எல்லா ஆலயங்களும் பிராமண கட்டுபாடு அல்ல, திருவாடு துறை , மதுரை போன்ற ஏகபட்ட சொத்துமதிப்புமிக்க ஆதீனம் உண்டு அவற்றில் எல்லாம் பிராமணர் தலைவராக இல்லை
வள்ளியூர் சுடலைமாடன் கோவிலின் பூசாரியாக பிராமணன் சாமியாடி ரத்தம் குடிப்பது உண்டு
இங்கு பெருந்தெய்வம் சிறுதெய்வம் என்ற வேறுபாட்டை எந்த இந்துவும் பார்ப்பதில்லை
சுடலை மாடனுக்கும், அய்யனாருக்கும், மதுரைவீரனுக்கும்,கருப்பனுக்கும் கொடுக்கும் அதே பக்திதான் முருகனுக்கும்,திருப்பதி சாமிக்கும் திருகாளகத்திக்கும்
நடிகரில் பெரும் நடிகர் சிறு நடிகர் இருப்பது போல தெய்வங்களில் பேதமில்லை, சினிமா துறை போலவே தெய்வங்களையும் நினைத்துவிடல் கூடாது.
இந்து தெய்வங்களில் வேறுபாட்டை ஒருநாளும் நல்ல இந்து பார்ப்பதே இல்லை. அதெல்லாம் உம்மை போன்ற அரைவேக்காடுகள் கண்ணில் தெரிவது
ஆண்டாண்டு காலமாக தென்னகத்தார் கயிலைக்கும் காசிக்கும் செல்கின்றனர், வடநாட்டிலும் ஒரு மதுரை மதுரா என கண்ணன் காலத்திலே இருந்தது
வடக்கத்தியர் ராமேஸ்வரம் காவேரி கன்னியாகுமரி என வந்து வணங்கினர்
இந்துக்களாக எங்கள் ஊருக்கு நீங்கள் வாருங்கள் உங்கள் திருதலத்துக்கு நாங்கள் வருகின்றோம் என்ற பிணைப்பு இருந்தது, இன்றும் இருக்கின்றது
அதை உம்மால் மறுக்க முடியுமா?
வடக்கத்திய திருத்தல பெயர்களை தென்னகத்திலும் தென்னக திருத்தல பெயர்களை வடக்கேயும் வைத்து பெரும் ஒருமைபாட்டை இந்நாடு கொண்டிருந்தது
என்ன சொன்னீர்?
வடநாட்டு கடவுளா? மண்டையில் ஏதாவது இருக்கின்றதா?
தமிழ் இலகியங்கள் சொல்வதென்ன? சங்ககால நூல்களும் ஏராளமான ஆதாரங்களும் சொல்வதென்ன?
அப்படி ஒரு வேறுபாடே இங்கு இல்லை
“தென்னாடுடைய சிவனே போற்றி” என்றுதான் இலக்கியங்களே சொல்கின்றன
பண்டை தமிழரின் இலக்கியம் எல்லாமே வட நாட்டு கடவுள் என நீர் பைத்தியகாரதனமாக உளறுவதை தம் சொந்த கடவுள் என என்றோ குறித்துவைத்துவிட்டன
நீர் சொன்னதால் இங்கு எதுவும் இல்லை என்றாகிவிடாது
வடநாட்டு தெய்வம் என சொல்வதாக இருந்தால் அரேபிய வாடிகன் தெய்வங்களையும் கேள்வி கேட்க தயாரா?
எத்தனையோ ஆதீனங்களில் பிராமணர் தலைவராக முடியாமல் கூலிகாரனாக இருக்க ஏன் உண்மையினை மறைகின்றீர்?
சிறுதெய்வ வழிபாட்டுக்கு பிராமணர் வரமாட்டான் என்ற பெரும் பொய் ஏன்?
சிறுதெய்வமோ பெருந்தெய்வமோ அதனை வழிபடுபவன் இந்து என்பதை ஏன் கள்ளதனமாக மறைக்கின்றீர்?
சாதி என்பது என்றோ ஒரு காலத்தில் மன்னர் காலத்தில் உருவாக்கபட்டது, ஆனால் இன்று எல்லா சாதி சங்கங்களும் அவற்றின் அரசியலும் அவற்றால் பலம்பெறும் சாதிய தலைவர்களும் பற்றி ஏன் நீர் பேசவில்லை
சாதி ஒழிய கூடாது என்பதில் பிராமணரை விட அதிக அக்கறை கொண்டது சாதிசங்க தலைவர்கள் என்பதை ஏன் சொல்ல மறுக்கின்றீர்
உடனடியாக உமது உரையாடலை மாற்றிவிட்டு படத்தை வெளியிடவும்
இல்லாவிட்டால் என்ன படம் அது?
கொளஞ்சி..
…….. போய்விடும் பிஞ்சி.