மாநிலத்திற்கொரு சட்டமுள்ள நாடோ

இது ஒரே நாடு, சட்டங்கள் எல்லா இடத்திலும் ஒன்று போலத்தான் இருக்க வேண்டும்

ஆனால் கர்நாடக குழப்பத்திற்கு ஒரு மாதிரி தீர்ப்பும், தமிழக குழப்பங்களுக்கு ஒரு மாதிரி தீர்ப்பும் நீதிமன்றங்கள் அளிப்பது மாநிலத்திற்கொரு சட்டமுள்ள நாடோ என அஞ்சதோன்றுகின்றது.

கர்நாடகாவினை விட மிக பலவீனமான பெரும்பான்மை இழந்த அரசு தமிழகத்தில் நீடிக்கின்றது

நிச்சயம் பாஜக அரசின் தயவு ஒன்றில்தான் அது நீடிக்கின்றது, சட்டபடியும் நியாயபடியும் அது நிலைபெற வேண்டிய ஆட்சி அல்ல‌

ஆனால் அதை செய்ய யார் இருக்கின்றார்கள்?

கன்னடத்தில் எடியூரப்பாவும் அவருக்கு பின்னால் பலமானவர்களும் இருந்தார்கள், கவிழ்த்தார்கள்

தினகரன் பல் இழந்த பாம்பு போல ஆகிவிட்டார்

முக ஸ்டாலின் என்பவரை பற்றி சொல்ல ஒன்றுமில்லை, மிக சிரத்தை எடுத்து, சில ஆட்டங்களை ஆடி பழனிச்சாமி அரசை கவிழ்க்க முடியுமா என்றால் முடியும்

ஆனால் முயற்சிக்கவில்லை, அதுபற்றிய விருப்பமே அவருக்கு இல்லை

திமுகவினர் எங்கள் தளபதி குறுக்கு வழியில் வரமாட்டார் நேர்வழியில் மக்களை சந்தித்தே வருவார் என அவர்களாக ஆறுதலடைகின்றனர்

அரசியல் என்பது நேர்வழி அல்ல, அதில் ஆயிரம் நெளிவு சுழிவுகளும், சந்தர்ப்பவாதமும் இன்னும் பலவும் உண்டு

மக்களை நம்பிய காமராஜர் என்ன ஆனார், இல்லா பொய்களை சொல்லி அவரை வீழ்த்திய திமுக என்ன ஆனது?

வெறும் வேடமிட்ட ராமசந்திரன் அசைக்கமுடியா சக்தியாக இருக்கவில்லையா?

அரசியல் என்பது அப்படித்தான், சில பல வியூகங்களை நெருக்கடியினை கொடுக்க முடியாத கட்சியும் தலமையும் காலத்தால் நிலைக்காது

இதெல்லாம் அவர்கள் சிக்கல்

இப்போதைக்கு குமாரசாமி வீட்டுக்கு கிளம்பிவிட்டார், எடியூரப்பா முதல்வராகி பழனிச்ச்சாமி ஸ்டைலில் தாங்கி பிடிக்கபடுவார் போல் தெரிகின்றது

மற்றபடி அகில இந்தியாவிலே மிக கொடுத்து வைத்த முதல்வர் பழனிச்சாமி ஒருவர்தான்

எல்லா எம்.எல்.ஏவும் விலகினாலும் பழனிச்சாமி ஒரே ஒரு உறுப்பினராக நீடித்தாலும் அவர் ஆட்சி நடக்கும்

அப்பொழுதும் எதிர்தரப்பு நீதி, நியாயம், தர்மம் என பழைய ராமசந்திரன் படத்து வசனம் போல் சொல்லிகொண்டே இருக்கும்..