அமெரிக்காவில் பாவமன்னிப்பு கோரிகொண்டிருக்கின்றார் இம்ரான் கான்
கிறிஸ்துவத்தில் பாவசங்கீர்த்தனம் என்றொரு சடங்கு உண்டு, கிறிஸ்தவன் தான் செய்த பாவங்களை அருட்தந்தையிடம் அறிக்கையிடுவார், அவரும் மகனே இனி பாவம் செய்யாதே, செய்தாலும் ஓடிவந்து சொல்லிவிடு என சொல்லி அனுப்புவார்
அவனை அனுப்பிவிட்டு ஏ கிறிஸ்துவே அவன் பாவங்களை மன்னிக்காமல் அங்கு என்ன செய்கின்றீர்? என ஆணையிடுவார், உடனே கிறிஸ்துவும் அவன் பாவங்களை மன்னித்தருள்வார்
அப்படி அமெரிக்காவில் பாவமன்னிப்பு கோரிகொண்டிருக்கின்றார் இம்ரான் கான்
பின்லேடனை நாமே பிடித்துகொடுத்தோம் என அவர் சொன்னது முதலாவது
நேற்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னால் அமர்ந்து எங்கள் நாட்டில் ஏகபட்ட தீவிரவாத குழு உண்டு, பாகிஸ்தானின் பழைய அரசுகள் அதை மறைத்தன, அவை சொன்னது எல்லாம் பொய், அவைகளால் எம்தேசம் உருப்படாமல் போனது, இனி அவ்வாறு செய்யமாட்டோம் அமெரிக்கா எங்களை நம்பி மன்னிக்க வேண்டும் என உருகியிருக்கின்றார்
அமெரிக்கா தில்லுமுல்லு தேங்காய்சீனிவாசன் போல தலையாட்டிகொண்டிருக்கின்றது
உண்மையில் என்ன நடந்திருக்கலாம் என்றால் இதுதான்
அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானில் இருப்பது உலகறிந்தது, அதை பாகிஸ்தான் மறைத்து நாடகமாடியதும் எல்லோருக்கும் தெரிந்தது
இந்தியா கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தான் மேல் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்க வழிகாட்டலும் உண்டு. அதன் பின்பே பாகிஸ்தான் ஆடிபோனது
இப்பொழுது அவர்கள் வாயாலே பாகிஸ்தானை கதற வைத்திருக்கின்றார்கள் அமெரிக்கர்கள்.
இதுதான் நடந்திருக்கும் என்கின்றது உலக செய்திகள்
இது அமெரிக்க ஆசியுடனே நடக்கும் விஷயம் என்பதற்கு ஏகபட்ட கோணங்கள் உண்டு
இம்ரான்கானின் வார்த்தைகளை கவனியுங்கள்
40 தீவிரவாத இயக்கம் உண்டு என்கின்றார் அதில் கவனமாக இந்தியாவுக்கு எதிரான இயக்கங்கள் எனும் வார்த்தையினை தவிர்த்துவிட்டார்
தாவூத் இப்ராஹிம் போன்ற பாகிஸ்தானின் செல்லபிள்ளைகள் பற்றி அன்னார் பேசவே இல்லை
தாலிபான்களை அமெரிக்காவுக்காக நாமே வளர்த்தோம் என்பதையும், அன்று ஆப்கனில் ரஷ்யாவுக்கு எதிராக அல் கய்தாவினை நாமே வளர்த்தோம் என்பதையும் இம்ரான் ஒப்புகொள்ளவே இல்லை, மவுமனாக கடக்கின்றார்
டிரம்ப் வேறு இந்தியா மத்தியஸ்தம் செய்ய அழைத்தது என கொளுத்திபோடுகின்றார்
இந்தியா ரஷ்யாவிடமிருந்து பல விஷயங்களை பெறுவது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை என்பது டிரம்பே சொன்னது
ஆக கூட்டி கழித்து பெருக்கி வகுத்துபாருங்கள், ஒரு விஷயம் பிடிபடும்
பாகிஸ்தான் திருந்திவிட்டது அவன் இப்பொழுது ஞானஸ்நானம் பெற்று கடவுளின் குழந்தையாக மாறிவிட்டான், ஏ இந்தியாவே வா அந்த புது நல்லவனிடம் பேசு , உலக சமாதானமே எமக்கு முக்கியம் என அமெரிக்கா கிளம்பலாம்
இந்தியாவுக்கு இது மிக அனுகூலமான நேரம், “இம்ரான் இப்பொழுதுதான் அவர்கள் செய்த தவறை ஒப்புகொண்டார், நாங்களோ 50 வருடமாக ஆதாரத்தோடு சொன்னோம்
அந்த சையீத் ஹபிஸ், தாவுத் இப்ராகிம், மசூத் அசார் போன்றவர்களை இனியாவது பாகிஸ்தான் ஒப்படைக்கட்டும்” என கேட்கலாம்
ஆனால் கேட்கவில்லை, ஏன் என்று தெரியவில்லை
இம்ரான்கானின் பாவசங்கீர்த்தனம் உள்நோக்கம் கொண்டது, அமெரிக்க கண் அசைவுடன் நடப்பது என ஒருகோஷ்டியும்
இல்லை இல்லை இது பாகிஸ்தானின் சரணாகதி என இன்னொரு கோஷ்டியும் சொல்கின்றது
எதுவாயினும் இன்னும் கொஞ்சநாளில் தெரிந்துவிடும்.
என்ன இருந்தாலும் ஒரு நாடு, அதுவும் அணுசக்தி நாடு தன் தன்மானத்தை விடுத்து இப்படி தரையில் உருள்வது, உண்மையிலே அவர்கள் தரித்திர கோலம் பூண்டுவிட்டதாகவே தெரிகின்றது.
ஏன் அப்படி ஆகிவிட்டார்கள்?
மதவாதமும் அது கொடுத்த இறுக்கமான விளைவுமன்றி வேறல்ல
இந்தியா இதனை பார்த்து திருந்திடல் வேண்டும்
மதசார்பற்ற இந்தியா என்பதால் , மத துவேஷம் இல்லா இந்தியா இன்று உலக வல்லரசுகளுக்கு சவால்விடும் அளவு வளர்ந்துள்ளது
இந்நிலை மாறி மதவாத சக்திகளிடம் நாடு சிக்கினால் என்னாகும்?
இன்று இம்ரான்கான் அழுவது போல இன்னும் 25 வருடம் கழித்து இந்திய பிரதமர் “இந்த சங் பரிவார் அமைப்புகள், பரிஷத் அமைப்புகள், இந்து வெறி இயக்கங்களால் உருப்படாமல் போனோம்” என அழுது கொண்டிருப்பார்
வளர்ந்திருக்கும் இந்தியாவும் காவி இந்தியா, ராமர் இந்தியா,சமஸ்கிருத இந்தியா என ஒருமாதிரி திசை திரும்புமானால் இன்று பாகிஸ்தான் சந்தித்திருக்கும் வீழ்ச்சியினை நாமும் அடைவோம்
நிச்சயம் நடக்கும்
பாகிஸ்தானின் தவறுகளில் இருந்து யார் பாடம் கற்க வேண்டுமென்றால் இந்தியாவே முதலில் படிக்க வேண்டும்
இது இங்கு விடபட்டிருக்கும் ஒருவகை எச்சரிக்கை என்பதே உண்மை.