பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது சரி
அந்த ஜெய்ஸ்ரீராம் கோஷம் பற்றி மணிரத்னம் உட்பட பலர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது சரி,
மிக சரி
ஆலயங்களில் அவர்கள் எவ்வளவும் ஜெய்ஸ்ரீராம் என சத்தம் எழுப்பிகொள்ளட்டும், உருகட்டும் பாடட்டும் அது மதரீதியான விஷயம் யாரும் கண்டிக்க முடியாது
இந்து எனும் முறையில் பிரதமரும் இந்துக்களின் ஆலயத்தில் சென்று ஜெய்ஸ்ரீராம் சொல்லி வழிபடட்டும்
ஆனால் பொது இடங்கள், அதுவும் பாராளுமன்றத்தில் எல்லாம் அதை சொல்வதை ஏற்க முடியாது
அவர்கள் ஜெய்ஸ்ரீராம் என சொல்ல இன்னொரு கோஷ்டி அல்லாஹூ அக்பர் என சொல்ல இதுதான் சாக்கு என அந்த கோஷ்டி அல்லேலூயா, இயேசுவின் ரத்தம் ஜெயம் என சொல்ல..
காவலுக்கு நிற்கும் சீக்கிய சமூகம் குருநாணக் வாழ்க என கிளம்ப, ஓரிரு புத்த மக்கள் புத்தம் சரணம் கச்சாமி என கிளம்பினால் பாரளுமன்றம் உட்பட பொது இடங்கள் அமைதியாய் இராது
இப்படிபட்ட சூழலை விட கூடாது என இக்கோஷ்டி பெரியார்டோவ், அண்ணாடோவ், உதயநிதிடோவ் என கிளம்பிவிடும்
மிக முக்கியமான பாராளுமன்றம்
போன்ற பொதுவிடங்கள் பைத்தியங்களின் மோதல் கூடமாகிவிடும் என்பதால் சில நடவடிக்கைகள் அவசியம் தேவை