விவகாரம் எல்லை மீறி சென்றுகொண்டிருக்கின்றது

விகடனில் வந்திருக்கும் திமுக தலமையின் விபரீத போக்கு பற்றி ஆளாளுக்கு விவாதிக்கின்றார்கள்

அந்த விகடனின் கட்டுரையில் உண்மை தன்மையும் இல்லாமல் இல்லை

நாம் ஏன் கலைஞருக்கு பின் திமுகவினை விமர்சித்தோம் என்றால் இதுதான் காரணம்

இதையெல்லாம் நாம் என்றோ சொல்லியிருந்தோம், திமுகவின் நெருக்கமானவர்களிடம் கூட சொல்லியிருந்தோம்

நாம் என்றோ சொன்னதை விகடன் இன்று எழுதியிருக்கின்றது

இதை முதன் முதலில் தமிழகத்திற்கு சொன்னது, திமுகவினரை எச்சரித்தது சங்கம்.

இதோ பெரும் சலசலப்பு திமுகவில் விகடன் கட்டுரையால் எழுகின்றது

இனியாவது திமுக அன்பர்கள் நம்மை புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றோம்.

புரிந்து கொள்ளாவிட்டாலும் சிக்கல் இல்லை

நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, யாருக்கும் ஆதரவானவர்களும் அல்ல,

ஆனால் நடக்கும் விஷயங்களை, மனதில் சரியென பட்டதை முதலிலே சொல்லிவிடுவோம். அதில் தயங்கிகொண்டிருக்க‌ அவசியமில்லை

நாம் எப்பொழுதுமே செய்திகளை கணிப்புகளை முந்திதந்துவிடுவோம், பிரபல பத்திரிகைகள் எல்லாம் பின்னால்தான் விழித்துகொள்ளும் என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள்.

என்னையும் விகடனையும் நோக்கி ஆரிய அடிவருடி, விலை போன சங்கி என கத்துவதில் அர்த்தமில்லை

விவகாரம் எல்லை மீறி சென்றுகொண்டிருக்கின்றது, அதை கவனியுங்கள்.