முதற்கோணல் முற்றும் கோணல்
1900களில் பிராமண சமூகம் அரசுபணிகளில் இருப்பதை சுட்டிகாட்டி போர்முரசு கொட்டினார்கள் அதில் பிராமண இனம் தவிர்த்த எல்லா இனமும் இருந்தது
அது நீதிகட்சி என்றானது, நீதிகட்சியில் ரெட்டியார் செட்டியார் முதலியார் நாயர் பணிக்கர் என எல்லாசாதியும் தாழ்த்தபட்ட சாதியும் இருந்தது
பின்பு நீதிகட்சியில் ரெட்டியும் நாயரும் இன்னபிறவும் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள் என ராமசாமி நாயக்கர் தலமையில் தனி கோஷ்டி கிளம்பிற்று
அது பின்பு முதலியார்கள் தலமையில் திமுக என கட்சியானது, ராமசந்திரன் எனும் நடிகனை நிறுத்தி இன்னும் என்னவெல்லாம் செய்து தாங்கள் சாதியற்ற கட்சி என காட்டி கொண்டார்கள்
பின்னாளில் திமுகவும் சரியில்லை வன்னியருக்கு ஒரு கட்சி, தேவர் சொன்னபடி மறவருக்கு ஒரு கட்சி, தாழ்த்தபட்டவருக்கு பல கட்சி என சாதிக்கொரு கட்சியாக பிரிந்தாயிற்று
இன்று சாதிக்கொரு கட்சி இருக்கின்றது
ஆக இதன் மூலம் என்னவென்றால் அன்று பிராமணர் மேல் காட்டிய வெறுப்பு பின் ஒவ்வொரு சாதியும் தனக்கு மேல்சாதிமேல் காட்டபட்டு அப்படியே உடைபட்டு இன்று மாபெரும் குழப்பத்தில் சிக்கியிருக்கின்றது தமிழ்நாடு
வெறுப்பிலே உருவாக்கபட்ட சிந்தனை இன்று தீராசோகத்திலும் குழப்பத்திலும் வந்து நிற்கின்றது..
முதற்கோணல் முற்றும் கோணல் என்பது இதுதான்