ஒருகாலமும் இந்த ஏமாற்று ஒப்பாரி தீரபோவதில்லை
அந்த பிராமணர்கள் மக்கள் தொகையிலும் அதிகம் அல்ல வெறும் 3 முதல் 5 சதவீதம்
நிச்சயம் வாக்கு அரசியலை அவர்கள் நிர்மானிக்க முடியாது, வென்று வருபவர்களில் பிராமணர் என்பது வெகு சொற்பமே மீதி எல்லாம் மற்ற வகையினர்.
பிராமணர் எண்ணிக்கைக்கு அவர்கள் பெருவாரியாக வெல்வதெல்லாம் சாத்தியமே இல்லை. அவர்களுக்கு அரசியல் பலம் இல்லை
அவர்கள் பணக்காரர்களுமல்ல அன்றைய அரசர்களோ பின்னாளைய டாட்டாவோ இந்நாளைய அம்பானியும் அல்ல
அவர்களிடம் மக்கள் தொகையுமில்லை, பணமுமில்லை பெரும் பின்னணியுமில்லை
உண்மையில் அது ஒன்றுமே இல்லா சமூகம், சீக்கிய சமூகம் போல அல்லாமல் அடித்தால் திருப்பி அடிக்க கூட வலுவில்லா சமூகம்
ஆனால் 72 வருட இந்தியாவில் அவர்களையேதான் சுற்றி சுற்றி அழுது இங்கு அரசியல் நடக்கின்றது
72 வருடமாக ஒரு மிகசிறு சிறுபான்மை இனத்தை நோக்கி ஒப்பாரிவைத்து அரசியல் செய்யபடுவது உலகிலே இங்கு மட்டும்தான்
இந்த ஒப்பாரி அரசியல் இந்தியா இருக்குமட்டும் இன்னும் பல்லாயிரமாண்டு நடக்கும் போலிருக்கின்றது.
இவ்வளவுக்கும் இவர்கள் விரும்பிய ஆட்சி, இவர்களே ஆண்ட சமத்துவ ஆட்சி எவ்வளவு காலமாகவோ நடந்தாயிற்று
என்ன கிழித்து சமத்துவத்தை நிலைநாட்டினார்கள் என்றால் சொல்ல தெரியாது.
ஆளும்பொழுது கம்மென்று இருப்பதும் ஆட்சி இல்லா காலத்தில் பார்ப்பானிய அட்டகாசம் என கொதிப்பதும் முழுக்க அரசியல்
ஒருகாலமும் இந்த ஏமாற்று ஒப்பாரி தீரபோவதில்லை காரணம் அதைவிடுத்தால் அரசியல் செய்ய இவர்களிடம் ஏதும் இல்லை