உலகெல்லாம் இது கப்பல் தகறாறு காலம் போலிருக்கின்றது
உலகெல்லாம் இது கப்பல் தகறாறு காலம் போலிருக்கின்றது, இந்த பிரிட்டன் ஈரானிய கப்பல் சர்ச்சை இன்னும் முழுக்க ஓயவில்லை
பிரிட்டனின் கப்பல் ஒன்று நேற்று ஈரான் பக்கமாக கத்தாருக்கு சென்றது,ஈரான் தடுக்கவில்லை
ஆக விஷயம் கொஞ்சம் அந்த மோதல் தணிந்திருக்கின்றது.
இப்பொழுது ரஷ்ய கப்பலை உக்ரைன் பிடித்து வைத்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கொஞ்சநாளாகாவே மோதல் ஒரு கட்டத்தில் உக்ரைனின் கிரீமியா பகுதியினை ரஷ்யா பிடித்து தன்னோடு இணைத்து கொண்டது
கொஞ்ச நாளைக்கு முன் ரஷ்ய கடலில் உக்ரைன் கப்பல் சிக்கியது, பின் என்னவெல்லாமோ பஞ்சாயத்து பேசிவிடுவித்தார்கள்
இப்பொழுது ரஷ்ய கப்பல் உக்ரைன் பக்கம் சென்றபொழுது இது தில்லுமுல்லு கப்பல் என சொல்லி உக்ரைன் பிடித்து வைத்து கொண்டது
கப்பலின் தில்லுமுல்லுவினை உக்ரைனுக்கு சொல்லி கொடுத்தது யார் என்பது தெரியவில்லை
ரஷ்யா இன்னும் இதுபற்றி வாய்திறக்கவில்லை, விரைவில் ஏதாவது அதிரடி ஆட்டம் ஆடுவார்கள்
சம்பவம் சொல்லும் கடல் சமூக நீதி என்னவென்றால் இப்பொழுதெல்லாம் ஓவ்வொரு கப்பலும் மிக நுட்பமாக ஒரு கழுகின் கண்களால் கண்காணிக்கபடுகின்றது