பலத்த என்டெர்டெயின்ட் கிடைக்கும்
பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜாண்சன் என்பவர் நியமிக்கபட்டிருக்கின்றார்
மனிதன் ஐரோப்பாவின் டிரம்ப் என்ற நிலையில் பெயர் எடுத்தவர், அதுவும் பிரிட்டனின் பிரதமரானவுடன் அழிச்சாட்டியங்களை ஆரம்பித்துவிட்டார்.
ஈரானுடன் முறுகல் இருக்கும் நிலையில் சில போர்கப்பல்களை அனுப்பியிருக்கின்றார், பிரிட்டனின் பாதுகாப்பு கவுன்சிலிங் எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி அந்த முடிவினை எடுத்திருக்கின்றார் ஜாண்சன்.
அட நம்மை மாதிரி ஒருவர் இருக்கின்றாரே, சரி இவரை இழுத்து போட்டு ஈரானை அடிக்கலாம் என நமுட்டு சிரிப்போடு டிரம்ப் இவரை அழைத்தாலும் அதெல்லாம் முடியாது என் வழி தனி வழி என சொல்லிவிட்டு அவர் போக்கில் இருக்கின்றார் ஜாண்சன்
ஏற்கனவே டிரம்ப் அழிச்சாட்டியம் தாளவில்லை நேரத்திற்கு ஒன்றை சொல்லிகொண்டு இருக்கின்றார், இன்னொரு டிரம்பினை உலகம் தாளாது என தலையினை அடித்துகொண்டிருக்கின்றது உலகம்
பல அதிரடி காமெடிகளை இருவரும் செய்வார்கள் பலத்த என்டெர்டெயின்ட் கிடைக்கும் என உலகம் காத்திருக்கின்றது
