ஆணவத்தின் உச்சம்
இந்த மத்திய அரசின் போக்கு ஒரு மாதிரி இருக்கின்றது, கிடைத்திருக்கும் பெரும்பான்மையினை கொண்டு தேசத்தை வளர்ப்பார்கள் என நினைத்தால் எதெல்லாம் தேசத்துக்கு ஆபத்தோ அதை எல்லாம் செய்கின்றார்கள்
அமித்ஷா காஷ்மீர் பற்றி பேசியிருப்பதெல்லாம் ஆணவத்தின் உச்சம்
இந்திய வரலாறு என்ன சொல்கின்றது, பிரிட்டனுக்கு உட்பட்ட இந்தியாவுக்கே சுதந்திரம் கிடைத்தது அந்த பகுதி மட்டுமே உண்மையான அங்கீகாரம் கொண்டது
கோவா போர்த்துகீசியரிடமும் புதுச்சேரி போன்றவை பிரான்ஸிடமும் இருந்தன, அதை சுதந்திர இந்தியா போர் தொடுத்து சேர்த்தது ஒரு வகையான ஆக்கிரமிப்பு அது
ஆனால் பல காரணங்களுக்காக அது அமைதியாக்கபட்டது, எனினும் அந்த பிரதேசங்களுக்கான யூனியன் அந்தஸ்து நீக்கபடும் என சொல்லி பார்க்கட்டும், பெரும் பிரளயம் வெடிக்கும்
யூனியன் பிரதேசங்களுக்கே இப்படி என்றால் காஷ்மீருக்கு எப்படி?
காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இருந்தது அல்ல, அது ஹரிசிங் எனும் மன்னனின் நாடு, அங்கும் ஒரு ரஞ்சித்தின் மலைகளை பிடுங்கி அவன் ஆண்டுகொண்டிருந்தான்
சுதந்திரத்துகு பின் பாகிஸ்தானும் இந்தியாவும் அதை விழுங்க தொடங்க, ஒரு ஒப்பந்ததுட்டனே இந்தியாவோடு அதை இணைத்தார் மன்னர்
அதுதான் பிரிவு 370
இன்று அந்த ஒப்பந்தம் செல்லாது என இந்தியா அறிவிக்குமானால் காஷ்மீர் இந்தியாவின் பகுதி அல்ல என்றாகிவிடும்
நெருப்போடு விளையாடுகின்றது பாஜக அரசு
விஷயம் வெறும் காஷ்மீர் அல்ல, அதன் ஒரு பகுதி பாகிஸ்தானிடமும் சிறு பகுதி சீனாவிடமும் உள்ளது
இந்நிலையில் 370ம் பிரிவினை நீக்கினால் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் கொண்டாட்டம் ஆகிவிடும், அந்நிலம் அவர்களுக்கே சொந்தமாகிவிடும்
தீர்ப்பதாக இருந்தால் அந்த பகுதியினை விட்டு பாகிஸ்தானையும் சீனாவினையும் விரட்டிவிட்டே அதை இந்திய பகுதி ஆக்க வேண்டும்
நிச்சயம் காஷ்மீர் 370 எனும் ஒப்பந்தம் ஒன்றாலே இங்கு இணைந்திருக்கின்றது அதை வெட்டிவிட்டால் அது இந்திய பகுதி அல்லவே அல்ல
அவர்களை இப்படி எல்லாம் ஆணவமாக அணுகினால் விஷயம் இன்னும் தீவிரமாகுமே தவிர சிக்கல் தணியாது
அவர்களுக்கு நம்பிக்கையும் அரவணைப்பையும் கொடுத்து அவர்களை மனதால் இந்தியராக உணரவைத்தே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல வேண்டும், அதுவே சரி
இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் வறுமையும் அறியாமையும் தாண்டவமாடுகின்றது, இத்தேசம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்
அந்நிலையில் காஷ்மீர் சிக்கலை இழுப்பதெல்லாம் ஆணவ அகங்காரத்தின் உச்சம்
அவர்கள் நம் சகோதரர்கள் எனும் வகையில் அவர்களின் நம்பிக்கையினை பெற வேண்டியது அரசின் கடமை
அவர்களுக்கு நல திட்டங்களை அறிவித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டிய நேரத்தில் இப்படி அவர்களை அலற வைப்பது போல அறிவிப்பு செய்வது சரியல்ல
ராணுவத்துக்கு செலவழிப்பதில் பாதியினை அம்மக்களின் வாழ்க்கை முன்னேற்றதிற்கு செலவழித்தாலே அங்கு பாதி சிக்கல் தீர்ந்தால் தீரும்
அதை செய்ய வேண்டிய அரசு இப்படி குண்டை வீசுவது சரியல்ல
நாம் அன்றே சொன்னோம் அமித்ஷா என்பவர் இந்த அமைச்சரவைக்கு கொஞ்சமும் பொருத்தமற்ற நபர், அவரால் சர்ச்சைகள் அதிகரிக்கும் என அன்றே சொல்லியிருதோம்
இதோ அது நடக்கின்றது, இன்னும் நிறைய நடக்கும்
விரைவில் யூனியன் பிரதேச அந்தஸ்தை ரத்து செய்து அமித்ஷா அறிவித்தாலும் அறிவிக்கலாம் இருந்து பாருங்கள்..
