மிக மிக கடைந்தெடுத்த பொய்

தமிழ் 2500 ஆண்டுக்கு உட்பட்ட வரலாறு கொண்டது என்பதெல்லாம் ஏற்றுகொள்ள முடியாது

பூம்புகார் கடலில் மூழ்கியே சில ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம், அப்பொழுதே தமிழ் இருந்திருக்கின்றது. சோழனின் அரசில் ஐரோப்பியரும் அரேபியரும் தூதராக இருந்தனர்

அதைவிட ஆழமாக நோக்கலாம்

தமிழின் முதல் சங்கம் கடல் கொண்ட கபாடபுரத்தில் இருந்திருகின்றது

லெமூரியாவும் அட்லாண்டிஸ் கண்டமும் கடலில் மூழ்கிய காலங்களே பழமையானவை, அப்பொழுதே தமிழ் பேசபட்டிருகின்றது

இவை எல்லாம் மிக தொன்மையான காலங்கள், அட தொன்மையினை விடுங்கள் பழங்காலத்துக்கு வாருங்கள்

எகிப்தில் பிரமீடு கட்டிய காலங்களில் இங்கு தமிழ்மொழி வழக்கில் இருந்திருக்கின்றது, அது ஐந்தாயிரம் காலத்துக்கு முந்தையது

இன்னும் விளக்கமாக சொன்னால் 3000 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலில் ஆண்ட மன்னன் சாலமோன்

அவனுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பிருந்திருக்கின்றது, தமிழக அரசர்களின் பெயர்களும் அவர்களின் அன்பளிப்பும் அவன் குறிப்பில் உண்டு

தமிழ்மொழி இக்காலத்தில் எல்லாம் இருந்தது என்ற குறிப்புகளே 5 ஆயிரம் ஆண்டை தாண்டி சொல்லும்பொழுது அதன் உண்மையான பழமை யாராலும் அறுதியிட்டு சொல்லமுடியாதது

ஆக 2500 ஆண்டுக்குட்பட்ட மொழி என தமிழை சொல்வது மிக மிக கடைந்தெடுத்த பொய், இதனை உடனே நிறுத்தவேண்டும்