நிபந்தனையற்ற அன்பினை கொண்டிருந்தவன் யார் தெரியுமா?
உண்மையில் வரலாற்றில் நிபந்தனையற்ற அன்பினை கொண்டிருந்தவன் யார் தெரியுமா?
ராவணன், அவனேதான் அவனுக்கு இன்னொரு பக்கம் இருந்தது
கம்பனின் ராமாயணம் மூல பிரதியான வால்மிகி ராமாயணத்தில் இருந்து மாறுபட்டது, விருப்பமில்லா பெண்ணை தொட்டால் தலை வெடித்துவிடும் என்பதும், பூமியோடு சீதையினை கவர்ந்து சென்றான் என்பதும் கம்பனின் சொந்த சரக்கு
தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ப அதை மாற்றிகொண்டான் கம்பன்
அந்த வால்மிகி வரலாற்றின்படி ராவணனுக்கு சீதையின் போதையினை ஏற்றியவள் சூர்ப்பநகை
அதில் மதிமயங்கிய ராவணன் சீதையினை தூக்கி வருகின்றான்
ஆனால் விருப்பமில்லா சீதையினை அவன் விரல் நுனி கூட தீண்டவில்லை அதே நேரம் அவளை திருப்பி அனுப்பவும் அவனின் காதல் விடவில்லை
தவியாய் தவித்தவன் அவள் மனம் மாறும்வரை அழகிய கானகத்தில் சகல சவுக்கியங்களுடன் சிறை வைத்தான்
கொடிய சிறையில் அடைக்கவில்லை, கிஞ்சித்தும் துன்புறுத்தவில்லை
அவளை அடைய அவனுக்கு ஒரு நொடி ஆகியிருக்காது, ஆனால் அவளின் விருப்பத்தை மீறி நெருங்க கூடாது என்பதில் அவளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காத்திருந்தான்
அவள் மனம் மாற அவன் காத்திருந்தான்
வாய்ப்பே இல்லாதவன் காத்திருப்பது வேறு, முழுக்க வாய்ப்பு இருந்தவன் அவளின் மனமாற்றத்துக்காக காத்திருந்தது வேறு
ராமன் பெரும் வீரன் என்பதால்தானே காதல் கொண்டாய், இதோ அவனைவிட பெரும் வீரன் நான் என நிரூபிக்கின்றேன் என சொல்லி அவளுக்காய் அந்த யுத்தத்தையும் சந்தித்தான்
அதில் இறந்தும் போனான்
இறக்கும் நொடிவரை அவள் மனம் மாறும், ஏதாவது ஒரு கட்டத்தில் தன்னை நிரூபிக்கமுடியும் என நம்பினான்
ஆம் , அவனின் சில விருப்பங்கள் தவறாக இருக்கலாமே அன்றி அவனுக்கு வந்த அந்த காதல் தூய்மையானது
அடுத்தவன் மனைவியினை தூக்கி வந்தான் என்ற கோணத்தில் பார்ப்பதை விட, அவளை எப்படி கண்ணும் கருத்துமாக அதுவும் அவளின் மனதுக்கு மரியாதை கொடுத்து காத்து நின்றான் என உணர்ந்து பாருங்கள்
ராவணன் மேல் தனி மரியாதை வரும்
உலகில் ஒருதலை காதலில் தீரா சோகத்தை தேடிகொண்டவர்களில் என்றுமே ராவணனுக்கு முதலிடம் உண்டு
ஆனால் அவன் காதலில் ராமனை விட உண்மை இருந்தது, கடைசி வரை சீதையினை காத்து நின்றான்
சந்தேகத்தில் சீதையினை தீக்குள் இறக்கிய அயோத்தி நாயகனை விட , சகல வாய்பிருந்தும் அவளை காத்து நின்ற , இன்னொருவன் கைபட்ட பொருள் எனக்கு வேண்டாம் என கைவிடாமல் உண்மை காதலாய் காத்து நின்று அவளுக்காய் உயிரையும் விட்ட லங்காபுரியானின் காதல் உயர்ந்ததே…
அவனுக்கு பத்து தலை இருந்திருக்கலாம், ஆனால் மனம் ஒன்றே, அந்த மனதில் இருந்ததும் ஒரே நினைவே..
அதை தீயில் இறங்கி வந்தபின்பு சீதையும் உணர்ந்தாள், ராமனும் உணர்ந்தான்
(இந்த அட்டகாசமான ஒருதலை காதல் கதையினைத்தான் ராவணா என படமாக எடுக்க முனைந்தார் மணிரத்னம்
நிச்சயம் மிக அழகாக வந்திருக்க வேண்டிய படம் அது, முறையாக எடுத்திருந்தால் மவுனராகம் எல்லாம் கடந்து நின்றிருக்கும்
ஆனால் சொதப்பி, குழப்பி நடிகர்கள் தேர்வில் குழப்பி இன்னும் எதிலெல்லாமோ குழப்பி படத்தை கொன்றுவிட்டார் மணிரத்னம்)
