Unconditional Love

Unconditional Love என ஆளாளுக்கு பேசிகொண்டிருக்கின்றார்கள்

Unconditional Love எனும் வார்த்தையினை 
முதலில் தமிழகத்தில் சொன்னவர் யார் தெரியுமா? சாட்சாத் அந்த ஜெயலலிதா

நிபந்தனையற்ற அன்பு (unconditional love) என்பதை என் வாழ்வில் நான் கண்டதே இல்லை என அவர் ஒரு பேட்டியில் சொன்னபொழுது அதை கேட்டவர்கள் மனம் கலங்கித்தான் போனது

கடைசி வரை அப்படி ஒரு அன்பினை அவர் அனுபவிக்காமல் அனாதையாய் மரித்தது அவரின் கர்மா அல்லது விதி

தமிழக மக்கள் தன்னை நிபந்தனையின்றி அன்பு செய்கின்றார்கள் என்பதை பின்னாளில் அவர் உணர்ந்திருக்கலாம், அதுவும் முதல்வராக பணியாற்றவே விரும்புகின்றனர் எனும் நிபந்தனை இருப்பதை அவர் உண்ர்ந்திருக்கலாமோ என்னவோ?

Unconditional Love என்பதை வரலாற்றில் திகட்ட திகட்ட அனுபவித்தர்கள் நெப்போலியனின் ஜோசப்பின், ஷாஜகானின் மும்தாஜ்

நிபந்தனையற்ற அன்பு என்பது அவர்கள் மேல் பொழியபட்டது இருவரும் பெரும் அழகிகளும் அல்ல அறிவாளிகளும் அல்ல‌

ஆனால் பெரும் பொக்கிஷமாக அந்த சக்கரவர்த்திகளால் கொண்டாடபட்டார்கள், போர்களத்தில் இருந்து கூட இவர்களை நேசித்து அவர்கள் உருகும் அளவு நிபந்தனையற்ற காதல் பொழியபட்டது

வெறும் பெண்ணாக அவர்கள் நோக்கபட்டிருந்தால் அது சாத்தியமல்ல அதையும் தாண்டிய ஈர்ப்பும் அன்பும் நேசமும் இருந்திருகின்றது

அதுவே அந்த நிபந்தனையற்ற அன்பினை மழைபோல கொட்ட செய்திருக்கின்றது,அவர்கள் அதில் நனைந்திருகின்றார்கள் மூழ்கியிருக்கின்றார்கள், திணற திணற அதில் கலந்திருக்கின்றார்கள்.

“நீ யாராகவும் இரு, எங்கேயும் இரு. எப்படியும் வாழ்ந்து கொள், என்னை உனக்கு பிடிக்குமா பிடிக்காதா என்பது விஷயம் அல்ல, அல்லவே அல்ல‌

உனக்கு எது தேவையோ அதை பெற்றுகொள், முழுக்க மகிழ்ச்சியாய் இரு. அதற்கு என்ன வேண்டுமோ அதை நான் தருகின்றேன்

உன் மகிழ்வும் நிம்மதியும் மன அமைதியுமே முக்கியம்

கேள் தரப்படும் ஆனால் உன்னிடம் எதுவும் எதிர்ப்பார்பதில்லை அது தேவையுமில்லை

வெளிதெரியா அஸ்திவாரம் கட்டத்தை தாங்குவது போலவும், மறைந்திருக்கும் வேர்கள் மரத்தை தாங்குவது போலவும் உன்னை தாங்கிகொள்வேன்

அந்த சுமையும் வலியும் உனக்கு தெரியாது, தெரியவும் வேண்டாம்

ஆனால் நான் வாழும் வரை உனக்காக வாழ்வேன், வாழ்ந்த பின்னாலும் உன் பெயரை தாங்கி நிற்பேன்”

ஒரு வகையில் முட்டாள் தனமானதும், பைத்தியகாரதனமானது என உலகால் சொல்லபட்டாலும் உண்மையான அன்பு என்பது அதுதான்

அந்த நிபந்தனையற்ற அன்பே உண்மை காதல், ஆனால் அது அமைவது அபூர்வத்திலும் அபூர்வம்

சுருக்கமாக சொன்னால் தெய்வம் தன் பக்தன் மேல் கொண்டிருக்கும் பாசம், அதுதான் நிபந்தனையற்ற அன்பு

உலகில் கொடுத்து வைத்த மகளிரில் இந்த இருவருக்கே முதலிடம்

திகட்ட திகட்ட நிபந்தனையற்ற அன்பினை பெற ஒரு வரம் வேண்டும் அந்த இருவரும் அதில் கொடுத்து வைத்தவர்கள்.

போர்களும் யுத்த வெற்றிகளும் கட்டங்களும் கண்டுபிடிப்புகளும் புரட்சிகளும் மட்டுமல்ல‌

நிபந்தனையற்ற அன்பினை பெற்றவர்களும் அதை கொடுத்தவர்களும் வரலாற்றில் நிற்கத்தான் செய்கின்றார்கள்..

Unconditional Love என்பதின் சக்தி அது..