பத்திரிகா தர்மம் சினிமா தர்மமாகிவிட்டதா?
முன்பு ஒரு தெலுங்கன் எம்மோடு வேலை செய்துகொண்டிருந்தான் அது பாகுபலிக்கு முந்தைய காலம்
சினிமா பற்றி பேச்சு வந்தபொழுது ஆந்திர சினிமா அட்டகாசங்கள் குறிப்பாக மழை காட்சி, கடவுளால் கூட நம்ப முடியாத சண்டை காட்சிகளை சொன்னால் சிரித்து கொண்டான், தொடர்ந்து அவர்களை கலாய்த்த பொழுது அவனால் பொறுக்க முடியவில்லை, மெதுவாக சொன்னான்
“எங்கள் சினிமா கதைகளில் பல அட்டகாசம் இருக்கலாம், ஆனால் ஹீரோ என்றால் உயரமும் உடற்கட்டும் வேண்டும், முகத்தில் ஒரு தேஜஸ் வேண்டும்
ராமராவ் காலத்தில் இருந்து பிரபாஸ் காலம் வரை நாங்கள் அப்படித்தான், சிரஞ்சீவி கொண்டாடபட்டதும் அப்படித்தான்
தனுஷை எல்லாம் நடிகர் என சொல்லும் தமிழ்நாட்டில் இருந்து நீ எல்லாம் பேச வந்துவிட்டாய்”
அதன் பின் பதில் சொல்ல என்ன இருக்கின்றது?
அப்படிபட்ட தனுஷை ஏதோ அகில உலக ஜாக்கிசான் போல தமிழக பத்திரிகைகள் எழுதி தள்ளுவதை கண்டால் இவ்வளவுக்கு பத்திரிகா தர்மம் சினிமா தர்மமாகிவிட்டதா? என்ற சோகமே ததும்புகின்றது.
தமிழகம் உருப்பட வேண்டுமானால் தமிழக மீடியாக்களை தொலைத்து கட்ட வேண்டும்..