அவர் அப்படித்தான் அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை
முக ஸ்டாலின் முதியவர் ஒருவரை மரியாதையின்றி தள்ளிவிடும் காட்சி வைரலாகின்றது.
அவர் அப்படித்தான் அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை, முன்பே மெட்ரோ ரயில் உட்பட பல இடங்களில் அதை பார்த்தாயிற்று
நிச்சயம் திமுக என்பது தலைவர்களின் பண்பால் வளர்ந்த கட்சி, அண்ணாவும் கலைஞரும் அதில் கண்ணும் கருத்துமாயிருந்தவர்கள்
அண்ணா அதில் தன்னிகரற்றவர்
கலைஞர் வாழ்வில் கூட ஏகபட்ட சம்பவம் உண்டு, ஒரு கிராமத்தில் கூட்டம் முடிந்து கிளம்புகின்றார் கலைஞர், பின்னால் ஓடிவருகின்றார்கள் சிறுவர்கள்.
பதறி காரை நிறுத்திய கலைஞர் கீழே இறங்கி அந்த சிறுவர்களை அன்போடு கடிந்துகொண்டார், பின்னால் ஒடிவந்தால் நடக்கும் விபரீதங்களை சொன்னார், பின் அன்போடு அந்த சிறுவர்களை தட்டிகொடுத்து திரும்பி போக சொன்ன கலைஞரின் மாண்பு வேறு
பணிவும் பண்பும் தலமைக்கான புன்னகையும் எல்லோரையும் சிநேகமாக நோக்குவதும் பிறவியில் வரவேண்டியது
அண்ணா அதில் தேர்ந்தவர், அவரை பார்த்து தேர்ச்சி பெற்று ஏகலைவனாக வந்தவர் கலைஞர்
ஸ்டாலினுக்கு இதெல்லாம் ரத்தத்திலுமில்லை அப்படி ஒரு பண்பினை வளர்க்க அவர் விரும்பியதுமில்லை
திமுகவுக்கு மிகசிறந்த தலமையினை கனிமொழி என்பவரால் கொடுக்கலாம், வேறு யாரும் இப்போதைய சரியான தேர்வு அல்ல