“அட இவனும் இவன் இம்சையும் ..”

“ஏ டிரம்ப் பேச வருகின்றீரா இல்லையா?..” என ஏவுகனை சோதனை செய்து அழைத்தது வடகொரியா

“இருப்பா,நீ எல்லாம் ஒரு ஆளா? ஈரானை நொறுக்கிவிட்டு வருகின்றோம்” என்பதுபோல அசால்ட்டாக இருந்தது அமெரிக்கா

“ஓஹோ.. அப்படியா” என சொல்லிவிட்டு தன் இரு ஏவுகனைகளை மறுபடியும் ஜப்பானை நோக்கி வீசியிருக்கின்றது வடகொரியா

அடேய் ஏவுகனை சோதனை செய்யமாட்டேன் என சொன்னாய் அல்லவா? என அமெரிக்கா கேட்க‌

“அண்ணே, நீண்ட தூர ஏவுகனைதான் சோதிக்க கூடாதுன்னு சொன்னீங்க, ஏண்ணா அது அமெரிக்காவுக்கு வந்துரும்

இது சின்ன ஏவுகனைன்னே, நேரம் போகாம வீசி விளையாடுறோம் நீங்க வேற வேலை இருந்தா பாருங்க” என சொல்லிவிட்டு அடுத்த ஏவுகனையினை தூக்குகின்றது வடகொரியா

“அட இவனும் இவன் இம்சையும் ..”என வடகொரியாவினை நோக்கி எரிச்சலாக பார்கின்றது அமெரிக்கா, வடகொரிய தக்காளியோ மெல்ல சிரித்து கொள்கின்றது

சிரித்தாலும் பரவாயில்லை “எண்ணண்ணே பொருளாதார தடை போட போறீங்களா? எல்லா தடையும் போட்டாச்சி, இனி போட ஒண்ணும் இல்லைண்ணே” என சொல்லி அதன் போக்கில் இருக்கின்றது