காஷ்மீருக்கு வழங்கபட்ட 370ம் சட்டபிரிவு ரத்து

காஷ்மீருக்கு வழங்கபட்ட 370ம் சட்டபிரிவு ரத்து செய்யபட்டிருப்பதாக அமித்ஷா அறிவித்திருக்கின்றார்.

நிச்சயம் இது இந்தியாவின் வரலாற்றில் மிக துணிச்சலான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை, நம்ப‌ முடியா அதிரடி முடிவு அது

இந்திரா காந்தி கூட தயங்கி நின்ற விஷயம் அது, அவர் காலத்தில் பனிப்போரின் விளைவுக்கு அவர் அஞ்சியிருக்கலாம்

அமித்ஷா அறிவித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு, இந்நாள் நிச்சயம் இந்திய வரலாற்றில் அதிர்வு கொடுத்தநாள்

இதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை காலமே காட்டும் எனினும் மகா துணிச்சலான நடவடிக்கை என்பதில் துளியும் சந்தேகமில்லை

இனி இந்திய வரலாற்றில் அமிஷ்ஷா பெயரும் இடம்பெறும்