இப்பொழுது இந்த கோஷ்டியினை காணவே இல்லை
தமிழ்நாட்டில் திமுக திக கும்பல் அடிக்கடி ஸ்டாலின் வீரமணி சுபவி வைகோ இன்னபிற அழிச்சாட்டியங்கள் ஒரே மேடையில் இருப்பது போல காஷ்மீரில் ஹூரியத் என்றொரு அமைப்பு உண்டு
அவர்கள் காஷ்மீரில் இருப்பார்கள் அப்படியே பாகிஸ்தானின் காஷ்மீருக்கு செல்வார்கள், லாகூரில் பிரியாணி உண்பார்கள், இஸ்லாமாபத்தில் கொடிபிடிப்பார்கள்
அப்படியே ஜம்மு பக்கம் வந்து காஷ்மீர் விடுதலை என உரக்க கத்துவார்கள்
இவர்களால் ஏதும் உருப்படியாக செய்யமுடியுமா என உலகம் கவனித்த நாட்களும் உண்டு
கலவரம் மோதல் போர் சூழல் என்றால் காணாமல் போய்விடுவார்கள் பின்பு வந்து தீர்வு என்ன என நடையாய் நடப்பார்கள், ஆலோசனையாய் சொல்வார்கள்
முந்தைய அரசுகள் இவர்களிடம் ஆலொசனை கேட்டுவிட்டு அதன் போக்கில் இருக்கும், இவர்களும் காஷ்மீரின் எதிர்காலமும் நம்பிக்கையும் நாங்களே என சொல்லிகொண்டே இருப்பார்கள்
சுருக்கமாக சொன்னால் இங்கு பெரியார் திராவிட தமிழ்தேசிய இம்சைகள் போல அங்கு ஹூரியத் அமைப்பு
இப்பொழுது இந்த கோஷ்டியினை காணவே இல்லை, எங்காவது காஷ்மீரிய ஓடை ஒன்றின் அருகில் மல்லாக்க கிடந்து துண்டுபீடி குடித்துகொண்டிருக்கலாம்
