எல்லாம் நாடகம் , எல்லாம் வேடம் , எல்லாமே பொய்
காஷமீர் மன்னன் தங்களுக்கு தனி அந்தஸ்து வேண்டும் என உத்திரவாதம் வாங்கிய பின்னரே, இந்தியாவோடு சேர்ந்து இருக்க சம்மதம் தெரிவித்தார். அதனால் இந்தியா காஷ்மீரிகளுக்கு துரோகம் செய்துவிட்டது என சில குரல்கள்
காஷ்மீரில் இப்பொழுதும் மன்னர் இருந்து அவர்கள் அதை கேட்டால் சரி
ஆனால் அங்கு மக்களாட்சி வந்தாயிற்று
இந்தியாவில் மன்னர் அதிகாரம் ஒழிக்கபட்டபொழுதே எல்லா ஒப்பந்தமும் காலாவதியாயிற்று
இந்திராகாந்தி மன்னர்களை ஒழித்துகட்டியபொழுதே காஷ்மீரிய ஒப்பந்தமும் வலுவிழந்தது என்பதே உண்மை
நல்லவர்கள் இந்திரா மன்னர்களை ஒழித்துகட்டும்பொழுதே காஷ்மீரிய மன்னன் வகையறாவிலும் அதிகாரத்திலும் கை வைக்காதே என பொங்கியிருக்க வேண்டும்
செய்தார்களா? இல்லை
பெரும்பான்மை இஸ்லாமிய மக்களுக்கு அன்று இந்து மன்னன் ஒழிவது ஆனந்தமாயிருந்தது கள்ளமவுனம் காத்தார்கள், அதாவாது தங்கள் தலையிலே மண் அள்ளி போட்டார்கள்
அன்று மன்னனின் அதிகாரம் கைவிட்டு போன பொழுது அதிகாரம் ஷேக் அப்துல்லாவின் கைக்கு வந்தபொழுது மகிழ்ந்தார்கள்
இன்று அது அவர்கள் கையினை விட்டுசெல்லும் பொழுது அலறுகின்றார்கள்
இன்று மன்னன் பட்ட அதே கலக்கதை அவர்கள் அடைந்ததும் அலறுகின்றார்கள்
எல்லாம் நாடகம் , எல்லாம் வேடம் , எல்லாமே பொய்