பரிதாபம்

வெள்ளையன் வரும்பொழுது தமிழக நாயக்க மன்னர்களும் சிற்றரசர்களும் ஆற்காடு நவாபுக்கு வரிகட்டினர்

நவாபு டெல்லியில் இருக்கும் முகலாயருக்கு அதை பொறுப்பாக கட்டிகொண்டிருந்தான்

இதை கண்காணித்தவன் ஐதரபாத் நிஜாம்

ஆற்காடு நவாபின் வாரிசு சண்டையில் கூலிபடையாக உள்ளே புகுந்த கிளைவ் லாவகமாக தமிழகத்தில் வெள்ளையன் ஆட்சியினை நிறுவினான்

காஷ்மீரிக்காவது இந்தியாவோடு சேர்ந்த ஒப்பந்தம் இருக்கின்றது, ஒரு கவுரவ அடையாளம் இருக்கின்றது

இந்த தமிழனுக்கு ஒரு மண்ணாங்கட்டி அடையாளமுல்லை கவுரவமுமில்லை

கடல்கடந்து பிழைக்கவந்த பிரிட்டானிய‌ கூலிபடையிடம் ஆட்சியினை கொடுத்த முதல் இனம் இந்தியாவில் தமிழ் இனம்

அவன் காஷ்மீரிக்கு வரலாறும் நியாயமும் சொல்லிகொண்டிருக்கின்றானாம், பரிதாபம்