இனவாதமும் குறுகிய அரசியல் வெறியும் அமெரிக்காவில் பற்றி எரியும் நேரமிது

அமெரிக்காவில் இதுவரை நடந்த துப்பாக்கிசூட்டுக்கும் இப்பொழுது நடந்திருக்கும் துப்பாக்கி சூட்டுக்கும் ஏற்பட்டிருக்கும் வித்தியாசம் பலத்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது

இவ்வளவு நாளும் அரை போதை,முழு போதை, காதலியுடன் தகறாது, காதலி இன்னொருவனுடன் ஓடி போன ஏமாற்றம் , அப்பன் ஆத்தா தகறாறு, மன அழுத்தம் என சுட்டுகொண்டிருந்தார்கள்

இந்த சூடு அப்படி அல்ல, அடுத்தநாட்டு மக்கள் மேல் குறிவைத்து நடத்தபட்டிருப்பது

டிரம்பின் வம்பான வசனங்களான அமெரிக்கா அமெரிக்கருக்கே மெக்ஸிக்கோவினரை விரட்டுவோம், ஆசியரை அடக்குவோம் எனும் ஸ்லோகம்படி நடந்தது

ஆம் சமீபத்தில் சுட்டதில் செத்த 31 பேரில் அதிகபடியானோர் மெக்ஸிகோ மக்கள்

இது பலரை அலறவைத்திருக்கின்றது , டிரம்பின் இனவாத தீ தேர்தல் வரவிருக்கும் நிலையில் பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிட்டதாக அமெர்க்கா பதறுகின்றது

ஓபாமா நேரடியாகவே விமர்சித்துவிட்டார் இன்னும் பலர் மறைமுகமாக விமர்சிக்கின்றனர்

இனவாதமும் குறுகிய அரசியல் வெறியும் அமெரிக்காவில் பற்றி எரியும் நேரமிது