விழிப்புள்ள குடிமக்களா எங்க சார் இருகாங்க?

ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தை முடக்கிட்டு ஒரு மாநிலத்தை பிரிக்கறதா பில் கொண்டு வர்றீங்களே வெட்கமா இல்லையா? இதுபோல கேரளாவிலோ தமிழ்நாட்டிலோ செஞ்சிட முடியாது.. ஏன்னா விழிப்புள்ள குடிமக்கள் இங்க இருக்கறவங்க : டி.ஆர் பாலு

என்னது விழிப்புள்ள குடிமக்களா எங்க சார் இருகாங்க?

இந்தியாவிலே இரு அணுவுலை இங்கேதான் இருக்கு, ஹட்ரோ கார்பன் உட்பட ஏக சிக்கல்

ஈழ பிரச்சினை, காவேரி சிக்கல் உட்பட எவ்வளவோ உள்ள மாநிலத்தில் ஒரு சிக்கல் தீர்ந்திருக்கின்றதா?

ஒரு ஆற்றில் நீர் ஓடுகின்றதா?

மாநிலம் டாஸ்மாக்கில் இயங்குகின்றது , மலையினையும் காணோம் ஆற்று மணலையும் காணோம்

தமிழன் பாரிலும், தியேட்டரிலும் இன்னும் எதில் எல்லாமோ மூழ்கி கிடக்கின்றான்

அவனின் உரிமை கச்சதீவு வரை முடங்கி கிடக்கின்றது

இந்தியாவிலே மானமும் அறிவு கெட்ட குடிமகன் இங்கேதான் இருக்கின்றான்

அவன் ராமசந்திரன் ஜெயா என வாக்களித்தான் இப்பொழுது அஜித் விஜய் என புரண்டுகொண்டிருக்கின்றான்

அட அவ்வளவு ஏன்?

கலைஞர் கருணாநிதியினை மிக அடக்குமுறையுடன் கைது செய்த, ஏன் இதே டிஆர் பாலுவினை தூக்கி எறிந்துவிட்டு நள்ளிரவில் கலைஞரை கைது செய்தார் ஜெயா

என்னாயிற்று? மறுபடி ஜெயாதான் வென்றார்

எதில் இவர்கள் கிழித்தார்கள்?

கிட்டதட்ட 3 முறை டிஸ்மிஸ் செய்யபட்ட அரசு திமுக அரசு. என்ன கிழித்தெறிந்தார்கள்? கண்ணீரை துடைத்துவிட்டு தேர்தலுக்கு வந்தார்கள் அவ்வளவுதான்

சும்மா உதார் விடுவது ஒன்றும் திமுகவுக்கு புதிதல்ல, ஒரு அவசரத்தில் தமிழகத்தை முடக்கினால் கூட திமுக ஒரு புல்லையும் புடுங்காது

பழனிச்சாமி ஆட்சியினை விடவா தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்து வந்துவிட போகின்றது?

அதிலே ஒரு புல்லை கூட புடுங்கமுடியா திமுக என்ன கிழித்துவிட போகின்றதோ தெரியவில்லை