ஆனால் செய்யமாட்டார்கள்

கலைஞர் நிச்சயம் பல்துறை வித்தகர், எல்லா துறையும் எல்லா மக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும், பிரமணாள் உட்பட‌

ஆம் அவர்மட்டும் அப்படி ஒரு பிராமண எதிர்ப்பினை காட்டாவிட்டால் அப்பாவி பிராமண கூட்டம் இங்கு ஆலயத்தில் மணியடித்து கொண்டு, கோவிலை கழுவிவிட்டு இங்கு சாதாரண பணியில் இருந்து வறுமையில் வாடியிருக்கும்

அவர் அடித்த அடியில்தான் பன்னாட்டு கம்பெனிகளின் நினைத்துபார்க்க முடியா பெரும் இடத்தில் பிராமணர் அமர்ந்திருக்கின்றனர்

அந்த அளவில் அவர்களுக்கு நன்றி இருந்தால் அவரை வணங்கட்டும்

விஷயம் அது அல்ல‌

கூத்தாடிகள் என்றும் சமூகத்தின் கடைநிலையினர் என்றிருந்த நாடக கூட்டத்திற்கு கலைதுறை எனும் கவுரவமான அடையாளத்தை பெற்று கொடுத்தவர் கலைஞர்

இந்தியாவில் எந்தமாநிலத்திலும் இல்லா அளவுசினிமா இங்கு சமூகம், அரசியல், மக்கள் சக்தி என எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்த மூல காரணம் கலைஞர்

ஆம் அவர்தான், அவர்கள் அதிகாரத்துக்கு வழிகோலியவரும் அவரே, அவர்களுக்கான பல சலுகைகளை கொடுத்த முதல்வரும் அவரே

மனசாட்சி இருந்தால் அந்த கலைதுறை மாபெரும் முதலாமாண்டு அஞ்சலி கூட்டத்தை கலைஞருக்கு நடத்த வேண்டும்

ஆனால் செய்யமாட்டார்கள்

காரணம் நன்றி, மனசாட்சி என இரண்டுமே கொஞ்சமும் இல்லாதது அந்த கலையுலகம்