இந்நாள் திமுக தலைவருக்கு முன்னாள் திமுக தலைவர் எழுதிகொள்வது
இந்நாள் திமுக தலைவருக்கு முன்னாள் திமுக தலைவர் எழுதிகொள்வது
உடல்பிறப்பே, காஷ்மீர் விவகாரத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது கூடவே என்னவெல்லாமோ மரித்துவிட்டதென சொல்லி நம் கழகம் அனைத்துகட்சி கூட்டத்துக்கு அழைப்புவிடுத்திருக்கின்றதாம்
சந்தடி சாக்கில் கச்சதீவினை ஏன் அமித்ஷா மீட்கவில்லை என்றெல்லாம் உதயநிதியின் உடபிறப்புக்கள் கேட்கின்றார்களாம்
பதிலுக்கு ஆரிய எதிரிகள், காரிய வாதிகள் என்ன கேட்பார்கள் என்றால் இந்திராவோடு கைகோர்த்த காலங்கள் அருமை வாஜ்பாயின் அவையில் இருந்த காலங்கள், பெருமகனார் மன்மோகன்சிங்கின் அவையில் அழிச்சாட்டியம் செய்த காலங்களில் எல்லாம் திமுக என்ன செய்தது என கேட்பார்கள்?
அதாவது என் அருகே படுத்திருக்கும் அறிஞர் அண்ணா என்னிடம் அனுதினமும் எதை கேட்கின்றாரோ அதையே உன்னிடமும் கேட்பார்கள்
அதற்கு நீ வழக்கமான அமைதியினை காட்டிவிட்டாலும், கோபாலபுரம் வீட்டுக்கு வந்து சின்னதம்பி எனும் காவியத்தில் நண்பர் கவுண்டமணி செய்வது போல் திட்டி தீர்ப்பாய் என்பதை நான் அறிவேன், அது ஒன்றுதான் நடக்கும்
நிற்க
நான் கடிதம் வரையும் விஷயம் என்னவென்றால், ஆரியமேகம் சூழ்ந்திருக்கும் நிலையில் நம் காரியம் முக்கியமென நீ இருந்திடல் வேண்டும்
காஷ்மீருக்காக ஏதும் கழகம் அறிக்கைவிட்டு அதன் பின் அங்கு விரும்பதகாத சம்பவம் நடந்தால் மிசா நினைவிருகின்றதா? உன் கண்முன்னாலே நடந்த சம்பவம் நினைவிருக்கின்றதா? மறந்துவிட்டால் நினைவுபடுத்திகொள்
அந்த பொறுமையின் சிகரமான அம்மையார் காலமே அப்படி என்றால் இந்த எமதூதர்களின் காலம் எப்படி இருக்கும்?
ஏற்கனவே ஈழஆதரவு என சொல்லி அங்கு நடந்த அனைத்து அழிவுக்கும் துணைபோனதால் நாம் பட்ட பழியும் அவமானமும் கொஞ்சமல்ல
இன்னொரு ஜெயின் கமிஷனை கழகம் தாங்காது, அதுவும் நீ தலைவனாக இருக்கும் கழகம் நொடிக்கும் தாங்காது
முத்துவேலர் பேரனே, என் மொத்த சொத்தின் வாரிசே , கழகமே , கண்மணியே காஷ்மீரைவிட்டு ஒதுங்கி நிற்பாய் கழகம் காப்பாய்