விரதம் இரும் அண்ணாச்சி

நேற்றிரவே மறுநாளுக்காக பிரட் வாங்கிவரசொன்னால் அறை நண்பனை காணவில்லை, உறங்கியாயிற்று

அரை தூக்கத்தில் உற்று பார்த்தால் போனில் முக ஸ்டாலினை பேசவைத்து இருட்டில் கைதட்டிகொண்டிருந்தான்

அவனை பார்க்க சின்னதம்பி கவுண்டமணி திரையங்கில் “சூப்பரப்பு” என கைதட்டுவது போலவே இருந்தது, எப்பொழுது உறங்கினானோ தெரியாது

அதிகாலை எழுந்து ஓ என அழுதான், எதுவும் அசம்பாவிதமோ என எண்ணி அலறி அடித்து கேட்டால் “கலைஞர் போயிட்டாரு” என சொல்லிகொண்டான்

பின் கரைஒதுங்கிய திமிங்கலம் போல மல்லாக்க கிடந்தவன் கண்ணை கசக்கிவிட்டு எழுந்து தயாரானான்

“லேய் பிரட் எங்கே?

கலைஞர் நினைவு நாளு, விரதம் இருக்கணும்னு தெரியாதா? பிரட்டு மட்டைன்னுட்டு ஓழுங்கா விரதம் இரும் அண்ணாச்சி” என சொல்லிவிட்டு சென்றுவிட்டான்

இன்றிரவு என்ன ஆட்டம் எல்லாம் ஆடபோகின்றானோ, அதை நினைத்தாலே பகீர் என்கின்றது