இந்திய தூதரை பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றிவிட்டது அந்நாட்டு அரசு
காஷ்மீர் விவகாரத்தை அடுத்து இந்திய தூதரை பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றிவிட்டது அந்நாட்டு அரசு, அதாவது இந்தியாவோடு உறவினை குறைக்கின்றார்களாம் மேற்கொண்டு வியாபார ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்தாயிற்று
இதற்கும் ஒருபடி மேல் சென்று பாகிஸ்தான் தன் வான் எல்லைகள் மேல் இந்தியா விமானங்கள் பறக்கமுடியாதபடி தடை செய்துவிட்டது
இந்தியா மெதுவாக புன்னகைத்து “சரி நமக்குள் என்று உறவு வலுவாக இருந்தது? எந்நாளும் நமக்குள் சண்டைதானே சகோதரா
என் தூதர் இங்கு வந்துவிட்டால் உங்கள் தூதர் இங்கு எதற்கு? அவர் என்ன ஜெய் ராமா என கத்தவா போகின்றார்? இதோ வைத்துகொள்” என திருப்பி அனுப்பிவிட்டது
கடும் எதிர்ப்பில் திரிகின்றது பாகிஸ்தான்
அதாவது அவர்கள் அரசியல் அது, அவர்கள் இதை செய்யாவிட்டால்தான் ஆச்சரியமே அன்றி, செய்தால் அது வழமையான ஒன்று
கொதிப்பில் பாகிஸ்தான் இருக்க, இதற்கு மேல் உன்னால் என்ன செய்துவிடமுடியும், செய்துபார் இருக்கவே இருக்கின்றது பலுசிஸ்தான் சிக்கல் என்றபடி புன்சிரிப்புடன் கடந்து செல்கின்றது இந்தியா
எனினும் 20 விமான நிலையங்களை 3 அடுக்கு பாதுகாப்பிற்கு இந்திய அரசு உயர்த்தியிருக்கின்றது
அப்படியே காஷ்மீரில் எழும் சலசலப்புகளை அடக்கவும் தொடங்கியிருக்கின்றது
370 விலக்கி கொள்ளபட்ட விவகாரத்தில் பல கட்சிகள் வரவேற்பு, சில எதிர்ப்பு ஒரு ஒரே கட்சிமட்டும் குழப்பம்
அதன் பெயர் காங்கிரஸ், ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொல்லிகொண்டு திரிகின்றார்கள். அக்கட்சி ஏன் நாசமாயிற்று என்றால் இப்படித்தான்
திமுக இதில் செய்யகூடாத அரசியலை செய்கின்றது , அனுபவமில்லா ஸ்டாலினை யாரோ தவறாக வழிநடத்துகின்றார்கள், அக்கட்சி இதனால் பெரும் சிக்கலில் விழலாம்
