1962 சீன யுத்தம் மறக்கமுடியாதது

காஷ்மீரிய வரலாற்றில் அந்த 1962 சீன யுத்தம் மறக்கமுடியாதது, கிழக்கு காஷ்மீரிய எல்லை அவ்வளவு கொடூரங்களை சந்தித்தது

மிக சரியாக குருசேவும் கென்னடியும் கியூபா பக்கம் உரசிகொண்டிருந்தபொழுது காஷ்மீரின் லடாக் பக்கம் பாய்ந்தான் சீனத்து மாவோ

இந்தியா அந்த தாக்குதலை எதிர்பார்க்கவில்லை, தலாய்லாமாவுக்கும் திபெத்தியருக்கும் மனிதாபிமானமாக கொடுத்த அடைக்கலத்தை சீனா கடுமையாக எடுக்கும் என யாரும் கருதவில்லை

சீனாவின் குறி அருணாசல பிரதேசத்தின் தவாங் மடாலயம் எனும்பொழுதும் காஷ்மீரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அக்சாய்சின் மலைபகுதியினை கைபற்றியது

அதில் சீனாவுக்கு பலத்த அனுகூலம் இருந்தது

காஷ்மீரின் அந்த பகுதியினை கைபற்றும்பொழுது சீன ராணுவம் செய்த கொடுமைகளும் பாலியல் ரீதியான இம்சைகளும் வரலாற்றின் கருப்பு பக்கம்
அந்நாட்களில் முதலில் நேரு சமாளித்தார் பின் தன் தொல்வியினை ஒப்புகொண்டார், நம்பி கெட்டேன் என என்னமோ சொல்லிகொண்டிருந்தார்

எல்லைக்கு சென்று உதவிய இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் முக்கியமானது சீன எல்லைக்கு சென்று அது பல உதவிகளை செய்தது

அதனால்தான் நேருவே பின்னாளில் அதை அரவணைத்தார், காந்தி கொலை எனும் கறையினை சீனப்போரில் ஆர்.எஸ்.எஸ் கழுவிகொண்டது

திமுக என்ன செய்தது? அவர்கள் திண்ணையில் படுத்தேனும் திராவிட நாடு காண்போம் என சொன்னது அப்பொழுதுதான்

சீனபோருக்கு பின் நேரு இறுக்கமாக மாறினார், இனி பிரிவினைவாத கோஷ்டிகளிடம் தாரளமில்லை என சீறினார்

அவ்வளவுதான்

திராவிட நாடு கோரிக்கையினை கைவிடுகின்றோம், இந்தியாவினை மனமார ஏற்கின்றோம், ஆனால் திராவிட நாடு கோரிய காரணம் அப்படியே இருகின்றது என டெல்லியிடம் சரணடைந்தது திமுக‌

அத்தோடு திராவிட நாடும் அதற்கு அவர்கள் காத்திருந்த திண்ணையும் கடலில் எறியபட்டது

அந்த திமுகதான் இன்று லடாக் காஷ்மீர் என என்னவெலாமோ சொல்லிகொண்டிருக்கின்றது பரிதாபம்