கலைஞரிடம் இருந்து எதை கற்றுகொள்ள வேண்டும்?

கலைஞரிடம் இருந்து எதை கற்றுகொள்ள வேண்டும்?

அந்த திருவாரூருக்கு வந்திருந்தார் அண்ணா, இங்கே இளமை பலி எனும் கதையினை எழுதிய கருணாநிதி எனும் பெரியவரை பார்க்க வேண்டுமே என்கின்றார், அந்த பதின்ம வயது பையனை நிறுத்துகின்றார்கள்

நம்பமுடியாத அண்ணா சொல்கின்றார் “தம்பி நீங்களா அது? ஏதோ பெரியவர் என நினைத்துவிட்டேன், நன்றாக படியுங்கள்”

அத்தோடு படிப்பினை விட்டார் கலைஞர்

கல்லகுடி போராட்டத்தில் டால்மியாபுரம் எனும் அறிவிப்பு பலகையில் கல்லகுடி என போஸ்டர் ஓட்டுவதுதான் கலைஞரின் அணிகுரிய பணி, “தம்பி போஸ்டரை ஒட்டிவிட்டு தமிழ் வாழ்க என சொல்லிவிட்டுவா” என ஆணையிட்டார் அண்ணா

அண்ணா ஆயிரம் சொல்வார் என அதை கொஞ்சமும் ஏற்காத கலைஞர் ரயில் நிலையத்தில் புகுந்து அழிச்சாட்டியம் செய்து துப்பாக்கிசூட்டில் 3பேர் கொல்லபட்டு இவரும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கபட்டு அதற்கு அல்லக்கைகளை வைத்து பாடலும் எழுதி கொண்டு அண்ணாவுக்கே அதிர்ச்சி அளித்தார்

1967 தேர்தலில் தம்பி காமராஜர் நாட்டுக்காக வாழும் பிம்பம், தயவு செய்து அவரை தோற்கடிக்கும் முயற்சியில் இறங்காதே என்றார் அண்ணா

ஒரே வேலையாக காமராஜரை தோற்கடித்துவிட்டுத்தான் வந்து அமர்ந்தார் கலைஞர்

ஆக அவர் வாழ்வு சொல்லும் நீதிஎன்ன?

“பெரிசுகள் சொல்வதை கேட்காதே ஒருநாளும் உருப்பட முடியாது, உன் மனதுக்கு என்ன தோன்றுமோ அதை ஆன்ம சுத்தியுடன் செய் உருப்படுவாய்..”