ஈரான் பெரும் அட்டகாச அறிவிப்பினை செய்திருக்கின்றது
ஈரான் பெரும் அட்டகாச அறிவிப்பினை செய்திருக்கின்றது வரும் ஆகஸ்ட் 22ம் தேதியன்று தங்களின் வான் பாதுகாப்பு சாதகமான பாவார் 373 என்பதை உலகிற்கு காட்டுவதாக அறிவித்துவிட்டது
இன்றைய நாளில் ஏவுகனை மற்றும் நவீன விமானங்களில் இருந்து தங்கள் நாட்டை பாதுகாத்து கொள்வதில் சில நாடுகளே பலம் பெற்றிருகின்றன
சில நாடுகள் ஏவுகனை எதிர்ப்பு ஏவுகனை மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகனை என்பதோடு நின்றுவிட்டன
உலகின் இப்போதைய வான் பாதுகாப்பு சிஸ்டத்தில் அமெரிக்காவின் தாட் சிஸ்டம், இஸ்ரேலின் அயன்டோம் சிஸ்டம் மற்றும் ரஷ்யாவின் எஸ் 300 முதல் 500 என்பவைத்தான் முதலிடத்தில் இருப்பவை
இந்தியாவிடம் காளி என்றோரு சிஸ்டம் உண்டு ஆனால் அதுபற்றி பெரிதும் காட்டாமல் ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 வாங்கபோகின்றோம் என்பார்கள், லேசர் கதிர்களை அடிப்படையாக கொண்ட காளி சிஸ்டம் என்ன ஆனது என்பது பற்றி இந்தியா இன்னும் வாய்திறக்கவில்லை, ரகசியமாக இருக்கலாம்
அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் ஆகியவையின் சிஸ்டத்தில் வெற்றிகரமாக சோதிக்கபட்டிருப்பது இஸ்ரேலின் அயன்டோம் மட்டுமே, மற்ற இருநாடுகளும் களத்தில் சோதிக்கவில்லை
ஆனால் இஸ்ரேலின் அயன் டோம் அமெரிக்க நுட்பத்தை ஓரளவு கொண்டது
இந்த வரிசையில் ஈரான் தானும் சுயமாக பாவார் 373 சிஸ்டத்தை கொண்டிருப்பதாகவும் அதனால் வளைகுடா முழுக்க அலறவைக்க முடியும் என்றும் பலத்த அதிர்வினை கொடுத்திருக்கின்றது
உண்மையில் அது அவர்கள் தயாரிப்பா?
அல்ல அது ரஷ்யாவின் 300 சிஸ்டத்தின் மறுபெயர் என்கின்றார்கள், பொருளாதார தடை உள்ள ஈரானுக்கு ரஷ்யா ஏதும் விற்கமுடியாது என்பதால் ரஷ்ய சிஸ்டம் வேறு லேபலுடன் காட்சிக்கு வருகின்றது
எதற்கும் ஆகஸ்ட் 22 வரை பொறுத்திருப்போம், என்ன நடக்கின்றது என பார்க்கலாம்
