அடுத்தமுறையும் அவரே அமெரிக்க அதிபராக வாழ்த்துக்கள்
இந்தியா காஷ்மீரின் 370 சட்டபிரிவினை நீக்க போவது அமெரிக்காவுக்கும் உலகின் இன்னபிற வல்லரசுகளுக்கும் முன்கூட்டியே தெரியும் அதனால்தான் அமெரிக்கா அமைதி காக்கின்றது என்கின்றன உலக ஊடகங்கள்
அதாவது சில வாரங்களுக்கு முன்பு அஜித்தோவல் அமெரிக்காவின் மைக் பாம்பியோவினை சந்தித்தார், அப்பொழுது இதுபற்றி பேசினார் என்கின்றார்கள்
இந்தியாவுக்கு அஜித்தோவால் எப்படியோ அப்படித்தான் அமெரிக்காவுக்கு பாம்பியோ
இரு கொடாகண்டன்கள் சாமான்யமாக சந்திக்கமாட்டார்கள், சந்தித்தால் விஷயம் இல்லாமல் இருக்காது
கவனியுங்கள் அந்த சந்திப்புக்கு பின்புதான் டிரம்ப் காஷ்மீர் சிக்கலில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய தயார் என உளறினார்
ஆனால் அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகளும், இன்னும் சிலரும் “அய்யய்யோ அவர் வாயினை மூடுங்களய்யா, இவரிடமா ரகசியம் சொன்னோம்” என ஓடிவந்து அவரின் வாயினை பொத்தியது குறிப்பிடதக்கது
இந்தியாவும் அதை மறுத்தது, அந்த சூடான நிலையிலே 370 ரத்து செய்யபட்டிருக்கின்றது
காஷ்மீரில் மத்தியஸ்தம் செய்ய தயார் என சொன்ன டிர்ம்பும் பிரட்டும் வெண்ணையும் சாப்பிட்டுவிட்டு அப்படியா, ரத்து செய்துவிட்டீர்களா? என்பது போல் சென்றுவிட்டார்
கூட்டி கழித்து பாருங்கள், உலகெல்லாம் தகுந்த ஏற்பாடுகளை அஜித் தோவாலும் ஜெய்சங்கரும் செய்துவிட்டுத்தான் இங்கு கத்தி வீசியிருக்கின்றார்கள் என்பது புரியும்
இந்த டிரம்ப் என்பவர்தான் எவ்வளவு விஷயங்களை புரிந்து கொள்ள உதவியாக இருக்கின்றார், மிக நல்லவர் போலிருக்கின்றது
அடுத்தமுறையும் அவரே அமெரிக்க அதிபராக வாழ்த்துக்கள்
