ஆசியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலை கட்டும் நாடு என்ற பெருமையினை சீனா பெற்றுவிட்டது
யானையினை கட்டிமேய்க்க விரும்புவன அங்குசத்தையும் வாங்க வேண்டும் என்பது தத்துவம்
சீனா தென்சீனகடல் முழுவதும் கட்டிமேய்க்க ஆசைபடுகின்றது ஆனால் கடற்படைக்கு தேவையான பெரும் பலமான விமானம் தங்கி கப்பல் அவர்களிடம் இல்லை
தரைபடையில் புற்றீசலாக ஏகபட்ட பலம் அவர்களிடம் உண்டு, மக்கள் செம்படையும் அவர்கள் மக்கள் தொகையும் அதற்கு வழிசெய்கின்றன
வான் வெளியிலும் அவர்கள் பலம் அதிகம், ஏவுகனைகளும் இன்னும் பலவும் பலம் வாய்ந்தவை
ஆனால் கடற்படையில் அவர்கள் கத்துகுட்டி, கடற்படை பலமில்லா நாடு வல்லரசாக முடியாது
அமெரிக்காவுடன் முறுகல் நிலை உள்ள நிலையில் சொந்த விமானம் தாங்கி கப்பல் கட்ட முயற்சித்தார்கள், முன்பே முயற்சித்தாலும் இப்பொழுது வெள்ளோட்டம் விட்டாயிற்று
ஆனால் தொழில்நுட்ப கோளாறில் சீனாவின் முதல் விமானம் தாங்கிகப்பல் தோல்வி என முடிந்துவிட்டது
எல்லா வெற்றியும் தோல்வியில்தான் தொடங்கும் என்பதால் விரைவில் அவர்கள் நிச்சயம் வெற்றிபெறுவார்கள்
விமானம் தாங்கி கப்பல் என்பது அவ்வளவு சிரமான நுட்பம், ரஷ்யாவிடம் கூட பெரும் எண்ணிக்கை கிடையாது
அமெரிக்காவிடம் எவ்வளவு உண்டு தெரியுமா?
இயங்கும் எண்ணிக்கையில் மட்டும் 11 உண்டு, அதாவது எப்பொழுதும் தாக்க தயார் எனும் வகையில் இருப்பவை அவை
இதுபோக மறைக்கபட்ட கணக்கும் உண்டு, அந்நாடு ஏன் தெனாவெட்டாக கடலில் திரியும் என்றால் இந்த பலம்தான்
எனினும் ஆசியாவின் முதல் விமானம் தாங்கி கப்பலை கட்டும் நாடு என்ற பெருமையினை சீனா பெற்றுவிட்டது
