துருக்கி செய்திருக்கும் காரியம்
நரசிம்மா படத்து விஜயகாந்த் போல கண்கள் சிவக்க அமர்ந்திருக்கின்றார் ரஷ்ய புட்டீன்
அவர் வோட்கா அதிகமாக குடித்து கண்கள் சிவக்கவில்லை மாறாக துருக்கி செய்திருக்கும் காரியம் அவரை அப்படி கன்னம் துடிக்க கண்கள் சிவக்க வைத்திருக்கின்றது
தன் காலடி நாடுகளை எல்லாம் அமெரிக்க பிடியில் இருந்து விடுவித்து தன் கட்டுபாட்டில் கொண்டுவர பெரும் திட்டத்தில் இருக்கின்றார் புட்டீன்
அப்படித்தான் கருங்கடலை அண்டிய நாடாகவும், மிக முக்கிய கேந்திரமான துருக்கியினையும் அவர் கட்டுபடுத்த விரும்பினார் அல்லது தன்னோடு இழுத்து போட முயன்றார்
அதாவது துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் முறுகல் வந்தபொழுது வலிய உள்ளே சென்றது ரஷ்யா, அமெரிக்கா துருக்கிக்கு எப் 35 ரக விமானம் கொடுக்காவிட்டால் ரஷ்யா சு 35 தரும் கூடவே எஸ் 400 தரும் என்றெல்லாம் சொன்னார்
துருக்கி விமானிகள் எப் 35 ரக விமானத்திற்காக அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி பெற்று முடிக்கும் வரை அமைதிகாத்த துருக்கி அது முடிந்தபின் ரஷ்ய 400 சிஸ்டத்தை பெற்றது
அப்பொழுது அமெரிக்க எப்35 விமானத்தை இயக்க தெரிந்த விமானிகளும் துருக்கியிடம் இருந்தார்கள், எஸ் 400 சிஸ்டமும் துருக்கியிடம் வந்தது
இந்த ராஜதந்திரத்தில் துருக்கி அடுத்த அதிரடியினை செய்துவிட்டது
அமெரிக்காவுடன் இணைந்து சில காரியங்களை செய்யபோவதாக அறிவித்துவிட்டது
இனி என்னாகும் எப் 35 விமானம் துருக்கிக்கு வரும், ரஷ்ய எஸ் 400 சிஸ்டமும் துருக்கியில் இருக்கும்
எப்படிபட்ட ராஜதந்திரம் பார்த்தீர்களா?
அவன் ராஜதந்திரம் எப்படியும் போகட்டும் இனி நம் எஸ்400 சிஸ்டத்தின் தொழில்நுட்பம் அமெரிக்க கைக்கு சென்றுவிடுமோ என கடும் அப்செட்டில் இருக்கின்றது ரஷ்யா
இந்த துருக்கி அமெரிக்காவுக்காக நடித்ததா இல்லை காரியம் சாதித்துகொள்ள இப்படி செய்ததா என தெரியவில்லை
எனினும் கடும் கோபத்தில் இருக்கின்றார் புட்டீன், நாகர்ஜூனுக்கு கையில் நரம்பு முறுக்கேறி ஏறுவது போல் ஏறிகொண்டிருக்கின்றது
(எனினும் சில செய்திகள், ரஷ்யா கடும் கள்ளதனம் நிறைந்த நாடு விற்பனைக்கு எனும்பொழுது பல நுட்பங்களை மறைத்து கிட்டதட்ட டம்மியாக ( நமக்கு மிக் விமானம் சுகோய் விமானம்) கொடுப்பது போலத்தான் மாற்றி கொடுப்பார்கள் அதை வைத்து வெளிநாடுகள் ஒன்றும் செய்ய முடியாது என்கின்றன )