வரலட்சுமி விரதம்

இந்துக்களின் விஷேஷ வழிபாட்டு நாட்களில் முக்கியமானது வரலெட்சுமி விரதம்

அதற்கான காரணம் என்னவென புராணம் சொல்லுமென்றால் பாற்கடலை கடையும்பொழுது லட்சுமி தேவி வெளிபட்ட நாள் அல்லது நேரம் என்பார்கள்

தேவி உதித்த அந்த நேரத்தில் குடும்ப பெண்கள் அவளை நினைத்து விரதமிருந்து வணங்கினால் எல்லா நலன்களும் கிட்டும் என்பது ஐதீகம்

லெட்சுமி தேவியினை வரசொல்லி இருக்கும் நோன்பே வரலட்சுமி நோன்பு

பெண்ணுக்கு எல்லா ஆசீகளும் வேண்டும் மிக முக்கியமாக கணவன் எனும் பெரும் ஆசி எந்நாளும் நிலைக்க வேண்டும் என்பதால் குடும்பபெண்கள் மிக சிரத்தையாக அந்த விரதம் மேற்கொள்வார்கள்

மற்றொரு கோணத்தில் சொல்வார்கள், வரலட்சுமி நோன்பு என்பது குடும்பத்து சுமங்கலிகள் நன்றி தெரிவிக்கும் நோன்பு என்பார்கள்

ஒரு சுமங்கலி தான் பெற்றுகொண்ட எல்லா நலன்களுக்காகவும் அதாவது தாலி தன் கழுத்தில் வந்தபின்பு கிடைத்த எல்லா ஆசீகளுக்காகவும் நன்றி சொல்லி அந்த ஆசி நிலைத்திருக்க வேண்டும் நாள் என்பார்கள்

அது மிகசரியான ஏற்பாடாகவும் இருக்கலாம், வாழ்வில் கணவனால் பெற்ற நன்மைகளை நினைத்து பார்க்கும் நாளாகவும் அந்நாள் அமைக்கபட்டிருக்க கூடும்

கூர்ந்து கவனித்தால் அந்த தத்துவமே தெரியும், தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் உழைக்கும் கணவனின் அன்பினை தியாகத்தை நினைவு கூர்ந்து அவனுக்காக தெய்வத்திடம் மன்றாடும் ஒரு ஏற்பாடு

சிலர் கணவன் காப்பு கட்டி விட்டு விரதத்தை தொடக்குவார்கள், அதாவது அவளுக்கு அவனே பாதுகாப்பு என்பதை குறிக்கும் கட்டு அது

இன்னொரு விஷேசமும் அதில் உண்டு

அன்று புடவை, நகை, வளையல் குங்குமம் என தானம் செய்வார்கள் அதாவது தான் பெற்றது போல நல்வாழ்வினை இன்னொரு பெண்ணும் பெற வாழ்த்தி செய்யும் உதவி அது

அந்நாட்களில் சுமங்கலிகள் கன்னிபெண்களுக்கு அதாவது திருமணத்துக்கு தயாராக இருக்கும் பெண்களுக்கு இப்படி மங்கல பொருட்களை கொடுத்து ஆசீர்வதிப்பார்களாம்

எம்மை போலவே நீயும் வாழ்வாய் என மனதார வாழ்த்தும் வாழ்த்து அது, அக்கம் பக்கத்து பெண்களுக்குள் நல்லுறவு ஏற்படுத்தும் ஏற்பாடு அது

படையல்களை பரிமாறும் தத்துவமும் அதுவே

வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

அந்த தெய்வம் தன்னை நம்பிய எல்லா பக்தர்களையும் ஆசி கொடுத்து வழிநடத்தட்டும்.

இது மத சம்பிரதாயம் என இந்துமதம் சொல்கின்றது, ஆனால் இந்நாட்டின் கலாச்சாரம் இது

எனினும் இப்பொழுது இந்துமதத்தார் தவிர மற்றவர்கள் அனுசரிக்க மாட்டார்கள்

இதுவே “Husband Day” என வெள்ளைக்காரன் சொல்லியிருந்தால் அனைவரும் கொண்டாடி அகதளம் செய்து என்னவெல்லாமோ செய்து கொண்டாடி தீர்த்து கொண்டிருப்பார்கள்.