வெளிசொல்லபடாத ஒப்பந்தம் உருவாகிவிட்டது

ஒரே நேரத்தில் இரு தேசியகட்சிகளை பகைத்து கொள்வது என்பது ஒரு மாநில கட்சிக்கு தற்கொலைக்கு சமம்

அதுதிமுகவுக்கும் தெரியும்

பின் ஏன் காங்கிரசோடு உரசுகின்றார்கள்?

எங்கிருந்தோ ஏதோ சிக்னல் கிடைத்திருக்கின்றது, எங்கோ உடன்பாடு ஏற்பட்டுகொண்டிருக்கின்றது

பாராளுனமன்றத்தில் திமுக சில மசோதாக்களை எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு என செய்யும்பொழுதே பலத்த சந்தேகம் வந்தது

அதை எல்லாம் பிளாசிபோரில் மீர்ஜாபரிடமே பார்த்துவிட்ட இந்தியா இது

நவாபின் படைகளை விட்டு என்னோடு யுத்தம்நடக்கும்பொழுது வா என அவனுக்கு ரகசிய உத்தரவிடிருந்தான் கிளைவ்

ஆனால் யுத்தம் தொடங்கியதும் இருபக்கமும் சேராமல் ஓடிய மீர்ஜாபர் பின் யுத்தம் முடிந்ததும் வெற்றியாளன் கிளைவின் காலடிக்கு வந்தான்

ஆம், இடையில் ஓடிவிட்டு திரும்புவது எதிரிக்கு சாதகமான செயல்

அந்த மீர்ஜபாரின் செயலைத்தான் பாராளுமன்ற மசோதாக்களில் திமுக செய்கின்றது

பாஜகவுக்கும் அவர்களுக்கும் வெளிசொல்லபடாத ஒப்பந்தம் உருவாகிவிட்டது நிஜம், அதை ஒப்புகொள்ளும் விதமாக காங்கிரஸோடு அவர்கள் உரசுவதும் நிஜம்