திமுகவுக்கு மாபெரும் பின்னடைவு

தமிழக நாடாளுமன்ற தேர்தலை கவனித்தோருக்கு ஒன்று புரியும்

இம்மாநிலம் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பக்கமே சரியும் அல்லது அது இருக்கும் இடமே பெரும்பாலான வெற்றி பெறும்

அது இந்திரா திமுக கூட்டணி, திமுக மூப்பனார் கூட்டணி திமுக சோனியா கூட்டணி, திமுக ராகுல் கூட்டணி என பல இடங்களில் தெரியும்

இது பிரிந்து நிற்கும்பொழுதெல்லாம் அதிமுகவுக்கு சாதகமாகும் கடந்தமுறை ஜெயா 36 அடிமைகளை பெற்றது போல‌

இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்தது நிச்சயம் காங்கிரசுக்கான வோட்டு

அதுதான் அந்த மாபெரும் வெற்றியினை திமுகவுக்கு கொடுத்தது

நாம் சொன்னால் இல்லை இல்லை எல்லாம் முக ஸ்டாலினின் வசீகரமான புன்னகை ததும்பிய முகத்துக்கும் அவரின் கணீர் வெண்கல குரலில் துப்பாக்கி சரமாக விழுந்த வார்த்தைக்குமானது என சிரிக்காமல் சொன்னார்கள்

அதைவிட கொடுமையாக உதயநிதிக்கு கிடைத்த வரவேற்பு என்றார்கள்

இப்பொழுது வேலூரில் டவுசர் கிழிகின்றது

துரைமுருகன் எனும் கட்சியின் இரண்டாம் நிலை தலைவரின் இமேஜ் சுக்குநூறாக உடைந்து கொண்டிருப்பது நிச்சயம் திமுகவுக்கு மாபெரும் பின்னடைவு