ராமரின் வம்சாவழிகள்?

ராமர் பிறந்த இடம் என ஆளாளுக்கு உரிமை கொண்டாடும் நேரம் சிலர் நாங்களே ராமரின் வம்சாவழிகள் என கிளம்பிவிட்டனர்

ஜெய்ப்பூர் அரசகுடும்பம் நாங்களே வாரிசு என சொன்ன நிலையில் இப்பொழுது மேவார் ராஜகுடும்பமும் நாங்களே ராமரின் வாரிசு என கிளம்ப்விட்டன‌

இன்னும் எந்தெந்த ராஜகுடும்பங்கள் கிளம்புமோ தெரியாது, தமிழகத்தில் இருந்து எச்.ராசா கோஷ்டி கிளம்பினாலும் கிளம்பலாம்

வானரங்கள் கோஷ்டி அவரிடம் அதிகம் உண்டென்பதால் வாய்ப்பு இருக்கின்றது

பூரா பயலும் ராமனின் வாரிசினை தேடுகின்றான் ஒரு பயலும் வால்மீகியின் வாரிசுகளை தேடுவதே இல்லை

எழுத்தாளனின் விதி அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை அப்படித்தான் இருக்கின்றது, சபிக்கபட்ட விதி