இது அவர்கள் காலம், ஆடட்டும்

எவ்வளவு செல்வ செழிப்பான நாடு அமெரிக்கா, உலகின் ஒவ்வொரு நாட்டு நாணயம் செலவழிக்கபடும் பொழுதும் அவர்களுக்கொரு பங்கு செல்கின்றது

அது கணிணி முதல் குளிர்பானம் வரை உண்டு, இன்னும் எதில் எல்லாமோ உண்டு. அவர்கள் வருமானமும் செழிப்பும் அப்படி

ஆனால் பணமிருக்கும் அளவு மனமில்லை அதுவும் டிரம்ப் என்பவரிடம் சுத்தமாக இல்லை

இனி வெளிநாட்டு வாசிகள் அதிக சம்பளமிருந்தால் இங்கு இருக்கலாம் இல்லைநடையினை கட்டலாம் என உறுமிகொண்டிருக்கின்றார்

அதாவது குறைந்த வருமானமுடைய வெளிநாடினர் இனி அங்கு இருக்க முடியாதாம், அரசின் சலுகைகளான கல்வி மருத்துவம் இன்னபிற சலுகைகளை பெறமுடியாதாம்

அதிக வருமானமுடையவருக்கு எதற்கு சலுகை? குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு அல்லவா கொடுக்கவேண்டும் என்றால் வெளிநாட்டு மக்கள் அமெரிக்க சலுகைகளை அனுபவிக்க கூடாதாம்

மிக பரந்த நாடு அமெரிக்கா, பெட்ரோல் முதல் மழை வளம் மண் வளம் வரை கொட்டிகிடக்கும் நாடு

ஆனால் சக மனிதரை வாழவைக்க அவர்களுக்கு எண்ணமில்லை

எனினும் இது அவர்கள் காலம், ஆடட்டும். ஆடும் வரை ஆடட்டும்