உலக‌ சுவாரஸ்யங்கள் இப்படித்தான்

கொஞ்சநாளாக அமைதியாக இருந்த இஸ்ரேல் மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது, இம்முறை களம் சிரியா அல்ல மாறாக ஈராக்

என்னதான் அமெரிக்க கட்டுபாட்டில் இருக்கும் நாடென்றாலும் அங்கு ஈராக்கிய அரசுக்கும் ஈரானுக்கும் திமுக அதிமுக போல ரகசிய இழை ஓடுகின்றது

முன்பு சன்னி நாடாக அறியபட்ட ஈராக்கில் ஷியாக்களும் அவர்களின் புனித ஸ்தலங்களும் உண்டு, ஈரான் அந்த உறவில் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்துகின்றது

ஈரான் வந்தால் சிரிய குழுக்கள், ஹவுத்தி குழு, முக்கியமாக ஹிஸ்புல்லா போன்றவை சாதரணாக நடமாடும்

ஈராக்கில் குவிக்கபடும் ஆயுதமும் ஈரானிய செல்வாக்கும் தனக்கு ஆபத்து என மிக சரியாக கணிக்கின்றது இஸ்ரேல்

இந்நிலையில் ஈரானிய ஆயுதங்களை காத்து நின்ற குடோன்கள் பாக்தாத்தில் ஏவுகனை வீச்சுக்கு ஆளாகி எரிகின்றன‌

மிக அட்டகாசமான துல்லியமான தாக்குதல் அது

அவை தரையிலிருந்து வந்ததா இல்லை விமானத்தில் இருந்து வந்ததா என தெரியவில்லை ஆனால் ஏவுகனை தாக்குதல்

இதை செய்திருப்பது இஸ்ரேலும் அமெரிக்காவும் என ஊகிக்க முடிந்தாலும் அவர்களும் சொல்லமாட்டார்கள்

ஈராக்கில் ரகசியமாக செயல்படும் ஈரானாலும் சொல்லமுடியாது

சில உலக‌ சுவாரஸ்யங்கள் இப்படித்தான்