உலகெல்லாம் கப்பல் விவகாரங்கள் மறுபடியும் விவகாரமாகின்றன
உலகெல்லாம் கப்பல் விவகாரங்கள் மறுபடியும் விவகாரமாகின்றன, சீனா தன் எண்ணெய் பரிசோதனை கப்பலை வியட்நாம் எல்லைக்குள் அனுப்ப தயாரகின்றது
தென் சீனகடலை பகிரும் நாடுகளில் வியட்நாமும் ஒன்று, ஆனால் எரிவாயு எண்ணெய்வளம் இருப்பதால் வியட்நாமிய கடல் பகுதி தனக்கே என சொந்தம் கொண்டாடுகின்றது சீனா
சீன கப்பல்கள் அங்கு அடிக்கடி செல்வதும் அதை வியட்நாமிய கப்பல்கள் விரட்டுவதும் வாடிக்கை
இந்த முறுகலில் இந்தியாவும் வியட்நாமுக்கு பிரம்மோஸ் ஏவுகனை எல்லாம் கொடுத்திருக்கின்றது, அமெரிக்காவும் காவல் இருக்கின்றது
காலம் எப்படி எல்லாம் மாறுகின்றது?
இதே வியட்நாமில் அமெரிக்கா தலைகுனிந்து நின்றதும் அநநேரம் சீனா வியட்நாமுக்கு செய்த உதவியும் கால கல்வெட்டுகள்
இன்று வியட்நாமும் அமெரிக்காவும் ஒரு அணியிலும் சீனா தனியாகவும் நிற்கின்றது
தமிழக அரசியலை விட உலக அரசியல் மகா மோசம் போல