ஒரு ராக்கெட் வெடித்திருப்பது கடும் சர்ச்சையாகின்றது
ரஷ்யா தன் ராணுவபயிற்சியினை செய்வதும் அடிக்கடி பிரமாண்ட ஆயுதங்களை சோதிப்பதும் இப்பொழுது வழமையாகிவிட்டது
அவர்கள் சோதிக்க சோதிக்க அதை பார்த்து புன்னகைப்பார் புட்டீன்
ரஷ்யாவின் ஏவுகனை மற்றும் ராக்கெட் சிஸ்டங்கள் இப்பொழுது அடுத்த தலைமுறைக்கு மாறுகின்றன
தன் சோயுஸ் டெக்னாலஜி மற்றும் ஏவுகனை டெக்னாலஜியில் புதுமையினை புகுத்தி சோதிகின்றது ரஷ்யா
அப்படியான ஒரு ராக்கெட் வெடித்திருப்பது கடும் சர்ச்சையாகின்றது, சும்மா வெடித்தாலும் பரவாயில்லை அணுசக்தியுடன் வெடித்தது என்கின்றது அமெரிக்கா
ரஷ்யா இதுபற்றி வாய்திறக்கவில்லை என்றாலும் ஏதோ நடந்திருப்பது உண்மை, புதிய டெக்னாலஜி பல்லை காட்டியிருக்கலாம்
இது ஒன்றும் ரஷ்யாவுக்கு புதிதல்ல குருச்சேவ் காலத்திலே நடந்ததுதான்
இன்றைய புட்டீனாக அன்று உலகை கலக்கிகொண்டிருந்தார் குருச்சேவ், கென்னடிக்கும் அவருக்குமான மோதல் கடுமையாக இருந்தது
உலகமே எதிர்க்க அஞ்சிய குருசேவினை அனாசயமாக எதிர்கொண்ட கென்னடி வரலாற்றில் நிற்கின்றார்
என்ன செய்தான் குருச்சேவ்?
ஒருமுறை ஐநா சபைமாநாட்டில் சீறினான் இப்படியாக “உலகின் அதிசக்தி வாய்ந்த ராக்கெட்டை நாம் தயாரிக்கின்றோம், அதன் மூலம் அமெரிக்காவினை நாசமாக்குவோம், போப்பாண்டவரை வாடிகனோடு கொளுத்துவோம்” என சவால்விட்டார்
அத்தோடு பரவாயில்லை, காலில் இருந்த ஷூவினை கழற்றி அவர் மேஜையில் அடித்தபொழுது உலகமே கலங்கிற்று
அதன் பின் என்னாயிற்று, அந்த ராக்கெட் சோதனையில் வெடித்து ரஷ்ய விஞ்ஞானிகள் 100 பேர் பலியானார்கள், ரஷ்யா விஷயத்தை மறைத்தாலும் அந்த சம்பவம் அவர்களுக்கு கரும்புள்ளி
இப்பொழுது அந்த அளவு இல்லை என்றாலும் மறுபடியும் ராக்கெட் சோதனையில் வெடித்திருப்பது புட்டீனின் முகத்தை இறுக செய்திருக்கின்றது
எனினும் விரைவில் தவறை களைந்து வெற்றிகரமாக சோதிப்பார்கள் என்பது நிஜம்
