இன்று ஆவணி அவிட்டம்

இன்று ஆவணி அவிட்டம்

அது பெரும் பண்டிகை, ஒரு காலத்தில் தேசம் முழுக்க தமிழகம் முழுக்க கொண்டாடபட்ட பண்டிகை என்றாலும் இன்று பிராமணருக்கான நாள் என குறுகிய வட்டத்தில் சென்றாயிற்று

ஒவ்வொரு பவுர்ணமியும் இந்துக்களுக்கு சிறப்பானது சித்திரை முதல் பங்குனி வரை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அவர்களுக்கு சிறப்பு, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கம் உண்டு

அப்படி ஆவணி மாத அவிட்ட நட்சத்திர பவுர்ணமியானதை கலைகளுக்கான தொடக்க நாளாக குறித்தார்கள்

பூனூலை புதுப்பிப்பது, முன்னோர்களையும் அவர்கள் கற்று தந்த வேதங்களையும் நினைவு கூர்ந்து நன்றி செலுத்துவது, வேதம் கற்க கற்பிக்க தொடங்குவது என சகலமும் இந்நாளில்தான் நடைபெறும்

இந்த பூனூல் திருமணம், சடங்கு சங்கதிகள் எல்லாம் இந்நாளில்தான் நடக்கும்

உபநயன‌ம் எனப்படும் உறுதிமொழியும் சில மந்திரங்களும் போதிக்கபடும், மந்திரம் என்பது பொதுவாக காயத்திரி மந்திரம் என்றாலும் இன்னும் பல உறுதிமொழிகளும் மந்திரங்களும் உண்டு

உபநயணம் என்பது வேறொன்றுமில்லை, நயனம் என்றால் கண் என பொருள். புற கண்களை தாண்டி அகக்கணுக்கு தேவையான பார்வையினை கொடுக்கும் விளக்கம் என் பொருள், அதுவே உபநயணம் ஆயிற்று

இந்நாள் உண்மையில் பிராமணருக்குரிய நாளா என்றால் இல்லை என்பதுதான் உண்மை, பூனூல் என்றால் பிராமணருக்கு உரியது மட்டும் எனும் தவறான கருத்தில் சொல்லபடும் விஷயம் அது

பூனூல் என்பது பிராமணருக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அக்காலத்தில் சான்றோர் என அறியபட்டவரின் தமிழர் அடையாளமாய் இருந்தது

நூல் என்பது புத்தகத்தை மட்டும் குறிப்பது அல்ல, அன்று கற்றறிந்த பண்டிதர்களையும் நூலோர் என்றே குறிப்பிட்டனர்

“நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என வள்ளுவன் சும்மா சொல்லவில்லை.

சிவகாசி நாடார்களும் பூனூல் அணிவது மரபு, இன்னும் சில சாதிகளிலும் உண்டு

கலைஞர்கள் , கலை வித்தகர்கள், கலையின் உச்சத்தில் இருக்கும் அனுபவஸ்தர்கள், தொழில் சொல்லிகொடுக்கும் குருக்கள் எல்லாம் பூனூல் அணிந்திருந்தனர்

அது முதிர்ச்சியின் அடையாளமாக காட்டபட்டது, மேல் சட்டை அணியா இந்திய சமூகத்துக்கு ஒருவனை கண்டவுடன் அடையாளம் காணும் முறையாகவும் அது இருந்தது

பூனூல் பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதெல்லாம் அபத்தமான வாதம், அரசியல்

தச்சர், வியாபாரி, சிற்பி, பொற்கொல்லர் என சகலரும் பூனூல் அணிந்தனர். அதாவது ஒரு கலை அல்லது தொழில் செய்யும்பொழுது அதை முறைபடி கற்கும் பொழுது ஒரு நூல் அணிந்து அதற்கான வித்தைகளை படிப்பது அந்நாளைய வழக்கம்

எல்லா துறை மாணவர்களுக்கும் அது இருந்தது.

பிராமணர் வேத மந்திரங்களை படிப்பர், தச்சு வேலை செய்வோர் அதன் அரிச்சுவடியினை படிக்க தொடங்குவர், இன்னும் பல தொழில்களும் கலைகளும் செய்வோர் இந்நாளில் கலைகளை கற்க தொடங்குவர்

ஒவ்வொரு கலைக்கும் தொழிலுக்கும் இலக்கணம் உண்டு, உறுதிமொழி உண்டு. அந்த கலையும் தொழிலும் என்ன நோக்கத்திற்கானது என்பதை உணர செய்து அதை மனதாலும் உணர்வாலும் கலந்து செய்ய , ரசித்து செய்ய செய்யபட்ட ஏற்பாடு அது

உணர்வாலும் உயிராலும் மனதாலும் கலந்து செய்யபடும் தொழிலும் கலையுமே நிலைக்குமே அன்றி, கடனே என கர்மபலனை தொலைக்க செய்யும் காரியம் நிலைக்காது

அதனால்தான் அக்கால கலைகள் எல்லாம் அழிவா வரம் பெற்று காவியம், ஆலயம், பாடல்கள் என இன்றுவரை நிலைத்து நிற்கின்றன‌

கலைகளை கற்க தொடங்கும் நாள் இது, எல்லா இனங்களும் ஒரு காலத்தில் கொண்டாடினர்

இன்று வேதம் படிக்கும் பிராமணர் மட்டும் அதை தொன்றுதொட்டு பாதுகாத்து வருகின்றார்களே தவிர மற்ற இனங்கள் அவற்றை விட்டுவிட்டன‌

விஞ்ஞானமும் இன்னும் பல வளர்ச்சியும் வந்துவிட்ட நிலையில் பல கலைத்தொழில்கள் இன்று தேவைபடா நிலையில் அவை மறைதாயிற்று

ஆனால் தேவை இருப்பினும் இல்லாவிடினும் வேதம் கற்க வேண்டும், பரம்பரை பரம்பரையாக அதை காத்து வரவேண்டும் என போராடும் பிராமண சமூகம் அந்த பாரம்பரியத்தை சுயதர்மமாக கருதி தொடர்ந்து வருகின்றது

அதனால் அது பிராமணருக்கு உரிய சடங்காக தெரிகின்றதே அன்றி வேறொன்றுமில்லை, உண்மையில் இந்நாள் எல்லா மக்களுக்கும் பொதுவானது.

தங்கள் சம்பிரதாயபடி ஆவணி அவிட்டத்தை பெருநாளாக கொண்டாடும் எல்லா இந்துக்களுக்கும் வாழ்த்துக்கள்

முன்னோர்கள் கற்றுகொடுத்த நற்பயிற்சிகளையும் முயற்சிகளையும் பயிற்சியாக பெறும் இந்நாளில் அவர்கள் தொட்டதெல்லாம் துலங்க வாழ்த்துக்கள்

(இது பிராமணருக்கான விழா அதனால் பன்றிக்கு பூனூல் போடுவோம் என எந்த அறிவுகெட்டவனாவது தமிழர் கலாச்சாரமும் பண்பாடும் தெரியாதவனாவது கிளம்பினால் எருமை மாட்டை பிடித்து அதன் மேல் பகுத்தறிவு என எழுதி அதற்கு கருப்பு துண்டும் கட்டிவிடலாம்)