திருப்பத்தூரில் நடந்திருக்கின்றது அந்த வினோதம்
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நடந்திருக்கின்றது அந்த வினோதம்
அந்த குடும்பத்தில் ஒரு நாய் வளர்த்திருக்கின்றார்கள், குறிப்பாக அந்த குடும்பத்து தலைவி அந்த நாயினை பாசமாக வளர்த்திருக்கின்றார்.
தொழில் நஷ்டம் காரணமாக ஏற்பட்ட கடனில் குடும்பத்தை தவிக்கவிட்டு ஓடிவிட்டான் அந்த குடும்ப தலைவன்.
மிகுந்த கடனும் அவமானமும் சூழ ஒருகட்டத்தில் தற்கொலை செய்கின்றாள் அந்த பெண். வீழ்ந்து கிடக்கும் அவள் அருகில் காவல் இருக்கின்றது அவள் வளர்த்த நாய்
அவள் சடலத்தின் அருகே யார் சென்றாலும் குரைகின்றது, கடிக்க வருகின்றது , அவர்களை விரட்டிவிட்டு அவள் காலடியில் படுத்துகொள்கின்றது
காவலர்கூட நெருங்கமுடியா அளவு ஆக்ரோஷத்தை அது காட்டுகின்றது, பின் அவளின் மகளை வைத்து மிகுந்த சிரமத்துக்கு பின் அதை கட்டிவிட்டு சடலத்தை எடுக்கின்றார்கள்
சடலம் எடுக்கபட்ட பின் கொஞ்சமும் சலனமின்றி வெறித்து படுத்திருக்கின்றது அந்த நாய்
கவனியுங்கள், 6 அறிவு கொண்ட அவளின் கணவன் , அவளின் முழு வாழ்வுக்கும் பொறுப்பான கணவன் அவளை விட்டு ஓடிவிட்டான்
சோறுவைத்த நன்றிக்காக அவளின் சடலத்துக்கு கூட காவல் இருந்திருக்கின்றது அந்த நாய்
நிச்சயம் அந்த கணவன் இந்த நாயினை விட உயர்ந்தவன் அல்ல.
பாசமும் நன்றியும் மனிதனை விட விலங்குகளுக்கு அதிகம், அவை அப்படியே இருக்கட்டும் என்பதால்தான் கடவுள் அவைகளை பணம் சம்பாதிக்கும்படி அனுமதிக்கவில்லை