கவனிக்கதக்க விருது
சுதந்திர தின விழாவில் அபினந்தனுக்கு விருது கொடுத்தது வரவேற்கதக்க விஷயம், இன்னொரு கவனிக்கதக்க விருது ஒன்று உண்டு
அது சாதுர்யமான செயல்பாட்டுக்கு கொடுக்கபடும் யுத் சேவா விருது, பெற்றிருப்பவர் மிந்தி அகர்வால் எனும் பெண் அதிகாரி
அம்மணி என்ன செய்தார்?
கடந்த பிப்ரவரி 27ல் அவர்தான் பாகிஸ்தான் இந்தியாமேல் தாக்குதல் நடத்த வருவதை அவதானித்திருக்கின்றார்,
அதாவது அன்று காலை பாகிஸ்தான் வான்பகுதி மூடல் எனும் அறிவிப்பு அவருக்குள் பொறியினை தட்டியிருக்கின்றது
சட்டென்று பயணிகள் விமானம் இயக்க தடை என பாகிஸ்தான் சொன்னபின் உஷாரன அந்த அதிகாரி இந்திய விமானபடையினை எச்சரித்துவிட்டு ரேடார் முன் அமர்ந்தார்
அதில்தான் பாகிஸ்தான் எப் 16 உட்பட 24 விமானங்கள் வருவது தெரிந்தது, அம்மணி விடுவாரா?
அம்மணி அந்த பதற்றத்திலும் சரியாக கவனித்திருக்கின்றார், காரணம் அந்த விமானங்கள் மிக வேகமாக வந்துவிடும்
வேறு முகாம்களில் இருந்து இந்திய விமானம் கிளம்புமுன் பாகிஸ்தான் விமானம் தாக்கிவிட்டு திரும்பிவிடும்
இதனால்தான் எல்லைக்கு அருகில் இருந்த அந்த முகாமுக்கு கட்டளை அனுப்பியிருக்கின்றார் அந்த பெண் அதிகாரி, அட்டகாசமான விஷயம் அது
அதில்தான் இந்த மிக் ரக விமானங்கள் கிளம்பி சென்று அவர்களை அடித்துவிரட்டி வீழ்த்தியது, அந்த 6மிக் விமானங்கள் ஒன்றில்தான் அபினந்தன் இருந்தார்
பாகிஸ்தானும் குழம்பியிருக்கின்றது, நம் எப்16ஐ எதிர்க்க சுகோய் ரகமும் மிராஜும் வரும் என எதிர்பார்த்து சென்ற பாகிஸ்தான் திடீரென மிக் ரகம் வந்ததும் குழம்பிற்று
எதிர்ப்பு இருக்காது, தாக்கிவிட்டு ஓடிவிடலாம் என வந்த பாகிஸ்தான் விமானங்கள் இந்த மிக் விமானங்களை கண்ட பின் திரும்பி சென்றது,
அதில் ஒன்றை விரட்டி சுட்டுத்தான் பிடிபட்டார் அபிநந்தன்
நிச்சயம் இந்த அதிகாரி செய்தது மகா நுட்பமான சாதுர்யமான நகர்வு இது, இந்திரா காந்தி வாழ்ந்த பூமி அல்லவா?
அம்மணி பிளையிங்க் கண்ட்ரோலர் பதவியில் இருக்கின்றார் என்கின்றார்கள்
பார்த்தீர்களா?
அன்றைய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலாவும் ஒரு பெண், அவர் ஆட்சியில் சாதித்திருக்கும் அதிகாரியும் ஒரு பெண்
இதைவிட பெண்களுக்கு பாஜக அரசு எப்படி சாதிக்க வாய்ப்பு கொடுக்க முடியும்
