அவசரபட்டு கொன்றுவிடாதீர்கள்

அடேய் இறந்து போனது வி.பி சந்திரசேகர் இவர் பேட்ஸ்மேன் எனப்படும் மட்டையாளர், தமிழர்
.

அந்த அற்புதமான கிரிக்கெட் வீரரான பி.எஸ் சந்திரசேகர் எனும் ஜாம்பவான் கன்னடத்துக்காரர் அவரின் சாதனையும் திறமையும் பெரிது அவர் இன்னமும் வாழ்கின்றார் அவர் பல்லாண்டு வாழட்டும்

பி.எஸ் சந்திரசேகர் போலியோவால் வலக்கை தோளில் பாதிக்கபட்டவர், ஆயினும் அட்டகாசமான சுழற்பந்து வீச்சாளர்

உலகில் முதன் முதலில் சுழற்பந்து வித்தையினை அவர்தான் கொண்டுவந்தார், இன்றளவும் இந்தியா சுழற்பந்தில் கும்ப்ளே, ஹர்பஜன் என சாதிக்க அவர்தான் வழிகாட்டி

(லகான் படத்தில் வரும் அந்த உடற்பேறு குறைந்த பந்துவீச்சாளர் பாத்திரம் இந்த பி.எஸ் சந்திரசேகரை குறித்தே உருவாக்கபட்ட பாத்திரம்..)

அவரின் சோதனை மிக்க வாழ்வும் சாதனையும் பெரிது

அவர் பல்லாண்டு வாழட்டும் , அவசரபட்டு கொன்றுவிடாதீர்கள்