மடுமாதா கோவில்
தமிழகத்தில் பூண்டி வேளாங்கண்ணி போல இலங்கையில் பிரசித்திபெற்றது மடுமாதா கோவில்
அங்கு சில தினங்களுக்கு முன்பு திருவிழா நடந்தது, ஆயர் தரப்பு 5 லட்சம் மக்கள் வந்தார்கள் என பெருமையாக சொன்னது.
ஆம் அந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு பின் சர்ச்களில் பாதுகாப்பினை பலபடுத்திவிட்டது இலங்கை
காவலுக்கு நின்ற ராணுவமோ 1.30 லட்சம் மக்கள்தான் வந்தார்கள் மீதி 3.70 மக்கள் எங்களை மீறி எப்படி வந்தார்கள் என அஞ்சி பதறியபடி கேட்டது
அது தமிழர்பகுதி என்பதால் சீமான் படைதிரட்டி வந்துவிட்டாரோ என அஞ்சியிருக்கலாம்
ஆனாலும் 5லட்சம் மக்கள் என ஆயர் தரப்பு சொல்லிகொண்டே இருக்க,ஒரு கட்டத்தில் ஆயர் கண்ணுக்கு செத்தவர்கள் எல்லாம் தெரிகின்றார்களோ என விட்டுவிட்டது ராணுவம்
அரசு தரப்பு 1.30 லட்சம் மக்களே வந்தார்கள் என அடித்து ஆவணமாக சொல்கின்றது
இருக்கட்டும்
அத்திவரதர் விஷயத்தில் 1 கோடி பேர் என நம் அரசே சொல்வதால் நாம் நம்பித்தான் ஆக வேண்டும்