என்ன மனிதர் அவர்?

ஏதோ ஒரு படத்தின் மூன்றேழுத்தை ஓடவிட்டு வைரல் என சொல்லிகொள்கின்றார்கள்

அன்றே அண்ணா மறைந்த பொழுது இந்த 3 எழுத்து வைத்து 300 சொற்கள் சேர்த்து அஞ்சலி கவிதையே எழுதிவிட்டு சென்றார் கலைஞர்

அண்ணா மூன்றெழுத்து , தமிழ் மூன்றெழுத்து, தம்பி மூன்றெழுத்து, வீரம் மூன்றெழுத்து, களம் மூன்றெழுத்து, கட்சி மூன்றெழுத்து, வெற்றி மூன்றெழுத்து, ஆட்சி மூன்றெழுத்து என நீட்டி முழங்கி திமுக மூன்றெழுத்து என முடித்திருந்தார்

என்ன மனிதர் அவர்?

எக்காலத்திலும் எல்லா சவாலுக்கும் அன்றே எழுதி வைத்திருப்பார் போலிருக்கின்றது

எனினும் சங்கம் இந்த 3 எழுத்து சவாலை ஏற்று உடனே அழகான பெயரை சொல்கின்றது

“குஷ்பு…………..”

இதைவிட 3 எழுத்தில் அழகான பெயர் சத்தியமாக கிடையாது