அந்த அலறல்தான் இன்று கேட்கின்றது
ஆமாடா
அனுதினமும் செத்துகொண்டிருக்கின்றான் விவசாயி, அதுவும் 50 வருட அலறல் அது
ஒரு பயலும் கேட்பாரில்லை, அந்த தொழிலே அழிந்து ஏதோ குற்றுயிராக முணுமுணுத்து கொண்டிருக்கின்றது
மீணவ தொழிலின் சிக்கலை காதுகொடுத்து கேட்கவும் யாருமில்லை, நெசவாளி நூலாக கிழிந்து கிடக்கின்றான்
ஆனால் டாட்டா எங்கோ சிக்கலில் சிக்கிவிட்டான் என்றவுடன் அய்யகோ இந்திய பொருளாதாரம் மூடபடுகின்றது என ஒப்பாரி கிளம்புகின்றதல்லவா?
இதுதான் இந்தியா
ஏன் இப்படி ஆயிற்று?
அன்று தேர்தல் நடத்தபட டாட்டா பிர்லாவிடம் காங்கிரசார் பிச்சை எடுத்தபொழுதே கொடுக்கபட்ட கட்டளை அது
இந்நாட்டில் தொழிலதிபருக்கு சாதகமான சட்டம் எழுது, எவன் செத்தாலும் ஒரு சத்தம் வரகூடாது, ஆனால் தொழிலதிபருக்கு ஒன்று என்றால் இந்தியாவே அலற வேண்டும்
அந்த அலறல்தான் இன்று கேட்கின்றது