ஈரானிய கப்பலை விடுவித்துவிட்டது
சில வாரங்களாக பிடித்து வைத்திருந்த ஈரானிய கப்பலை விடுவித்துவிட்டது
பிரிட்டனின் அடிமை நாடான ஜிப்ரால்டரில் ஈரானிய கப்பலை பிடித்து வைத்திருந்தது பிரிட்டன், இப்பொழுது ஜிப்ரால்டர் நீதிமன்றம் ஈரானிய கப்பலை விடுவித்துவிட்டது
ஈரானும் பிரிட்டனும் ஆளாளுக்கு ஒரு கப்பலை பிடித்து விளையாடிகொண்டிருந்தார்கள் பின்பு முறைத்தார்கள், சிரித்தார்கள் ரகசியமாக புன்னகைத்தார்கள்
விவகாரம் சில காலம் இழுத்துகொண்டிருந்த பொழுது இப்பொழுது பிரிட்டன் பிடித்து வைத்த கப்பல் விடுவிக்கபட்டாயிற்று
ஏதோ நடந்திருக்கின்றது, அமெரிக்க ஒப்புதலுடன் நடந்ததா இல்லை வேறு விவகாரமா என்பது பற்றி ஒன்றும் தெரியவில்லை
எப்படியாயினும் ஈரானிய கப்பலை விடுவித்திருப்பது ஈரானுக்கு புது தெம்பை கொடுத்திருக்கின்றது
ஏன் ஈரான் என்றால் இப்படி பம்முகின்றார்கள், ஆக ஈரானிடம் ஏதோ பெரும் ஆயுதம் ஒன்று இருக்கின்றது என்ற சந்தேகம் வருகின்றதல்லவா?