ஒரு முடிவோடுதான் இருக்கின்றார்கள்

பாஜக அரசு ஒருமாதிரியான அரசாகத்தான் இருக்கும் போலிருக்கின்றது

அதாவது 1998 அணுகுண்டு சோதனைக்கு பின் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர ஒப்பந்தம் ஒன்றை செய்தன‌

“இருவருமே முதலில் அணுஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம்” என்பது அது

பல இடங்களில் அதை மேற்கோள்காட்டி இரு நாடுகளுமே பதற்றமான நேரங்களில் பேசிகொள்ளும்

இப்பொழுது ராஜ்நாத் சிங் அதை முறிக்கும் விதமாக பேசியிருக்கின்றார் “ஆம், அப்படி ஒரு ஒப்பந்தம் உள்ளது, ஆனால் எதிர்காலமே அந்த ஒப்பந்தம் முறிக்கபடுமா இல்லையா என்பதை முடிவு செய்யும்” என சொல்லியிருக்கின்றார்

பாஜகவின் மூத்தவரும், முக்கிய அமைச்சர் இப்படி பேசியிருப்பது பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது

அரசின் கண்ணசைவு இன்றி அவர் பேசியிருக்க வாய்ப்பே இல்லை

ராணுவ அறிவு கொண்டோருக்கு சில விஷயம் புரியும், ஒருவேளை பாகிஸ்தான் அணுகுண்டு வீசினால் இந்தியா சில கடும் சேதங்களை சந்திக்கும்

ஆனால் பதிலடியில் பாகிஸ்தானே இருக்காது, மொத்தமாக அழிந்துவிடும்

இது பாகிஸ்தானுக்கும் தெரியும் என்பதால் அது ஒருமாதிரி பயந்து கண்களை உருட்டுகின்றது, உருட்டட்டும்

இந்த பாஜக ஆசாமிகள் ஒரு மாதிரியானவர்களாகத்தான் இருப்பார்கள் போல, ஒரு முடிவோடுதான் இருக்கின்றார்கள்