இரு  மெண்டல்கள் மத்தியில்

வடகொரியா இனி சூரிய உதயம் தோறும் ஏவுகனை செலுத்தி அதை வணங்கி சூரிய நமஸ்காரம் செய்வது என முடிவெடுத்திருக்கின்றது

குறுகிய தூர ஏவுகனைகளை அனுதினமும் ஏவி பீச்சில் பலூன் சுட்டு விளையாடுவது போல விளையாடிகொண்டிருக்கின்றது

அமெரிக்க அதிபரிடம் புகார் சென்றாலும் ” அந்த வெள்ளை குண்டனா? அட அவன் கெட்டிக்காரனப்பா. அமெரிக்கா ஜப்பானை தாக்கும் அளவு நீண்டதூர ஏவுகனைகளை சோதிக்கமாட்டேன் என நூடுல்ஸில் சத்தியம் செய்திருக்கின்றான்

இப்பொழுதும் பாருங்கள், குறுகிய தொலைவு ஏவுகனைதான் சோதித்தான், நம்ம வழிக்கு வரமாட்டான், நல்ல பையம்லா” என சொல்லிவிட்டு சென்றுவிடுகின்றார்

வடகொரியா செய்வதும் அந்த விளையாட்டே, நீண்ட தூர ஏவுகனைகளை சோதிப்பதில்லை

ஆனால் இந்த குறுகிய தொலைவு ஏவுகனை தென்கொரியாவுக்கு ஆபத்தானது, தென் கொரியாவின் எல்லா இலக்கையும் தாக்கலாம்

இதனால் அலறி அடித்து “யோவ் குண்டா, பேச வாய்யா” என அழைக்கின்றது வடகொரியா

“அதெல்லாம் முடியாது பங்காளி, உன் ஓணர் அமெரிக்காவினை வரசொல் ” என சொல்லிவிட்டு அடுத்த ஏவுகனையினை சோதிக்கின்றது வடகொரியா

“யோவ் அவன் வரமாட்டான்யா, ஆபத்து எனக்குத்தான்யா, வாய்யா பேசுவோம்” என்கின்றது தென் கொரியா

“டேய் லூசு பங்காளி உன் நாட்டில் நீ மட்டுமல்ல 30 ஆயிரம் பேர்கொண்ட அமெரிக்க ராணுவ முகாமும் உண்டு. அதை நான் தாக்கும் ஆபத்து உண்டு என அந்த மரமண்டையன் டிரம்பிடம் சொல்லு” என சொல்லிவிட்டு அதன் போக்கில் இருக்கின்றது வடகொரியா

தென்கொரியா டிரம்பிடம் அதையும் சொல்லிற்று, எங்கள் நாட்டில் இருக்கும் உங்கள் ராணுவ முகாமை அவன் ஏவுகனை தாக்கும் என சொல்லிபார்க்கின்றது அது

டிரம்போ “இருய்யா, சீனாவோட இன்னும் பேச்சு முடியல்லை, குண்டன் சும்மாய்யா, அவன் நம்ம பயலாயிட்டான், உங்களுக்கும் அவனுக்கும் பங்காளி தகறாறாக இருக்கும்” என சொல்லிவிட்டார்

இரு மெண்டல்கள் மத்தியில் மாட்டிகொண்டு தலைமேல் கைவைத்து அமர்ந்திருக்கின்றது தென்கொரியா